
Cinema News
Ajith: அஜித் சார் என்னோட அப்பா!.. உருக்கமாக பேசும் ஆதிக் ரவிச்சந்திரன்..
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கினார். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றது. அதுவே படத்தை ஓடவும் வைத்தது.
கை கொடுத்த அஜித்:
ஆனால் அதன்பின் ஆதிக் இயக்கிய சில படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை. எனவே அஜித் நடித்த நேர்கொண்டே பார்வை திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்குமளவுக்கு போனார். அதுகூட அஜித்தை அருகிலிருந்து பார்க்கலாம் என்பதற்காகத்தான். அந்த படத்தில் நடித்த போது ஆதிக்கின் மீது நம்பிக்கை வைத்த அஜித் ‘நீ ஒரு ஹிட் கொடுத்துவிட்டு வா.. உன் படத்தில் நான் நடிக்கிறேன்’ என சொன்னார். அஜித் கொடுத்த நம்பிக்கையாலும், உத்வேகத்தாலும் ‘மார்க் ஆண்டனி’ என்கிற கதையை எழுதி விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோரை வைத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். கேங்ஸ்டர் காமெடி வகையை சேர்ந்த மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.
குட் பேட் அக்லி சூப்பர் ஹிட்:
அதன்பின் ஆதிக்கின் இயக்கத்தில் நடிக்க அஜித் சம்மதம் சொன்னார். அப்படி உருவான குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று நல்ல வசூலை பெற்றது. அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்களோ அதை எல்லாம் திரையில் கொண்டு வந்திருந்தார் ஆதிக்.
அஜித் என்னோட அப்பா:
இதனால் மகிழ்ச்சியடைந்த அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அது ஆதிக்கிற்கே கொடுத்திருக்கிறார். அதாவது அஜித்தின் 64வது படத்தை ஆதித் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆதிக் ‘இப்போது நான் இருக்கும் நிலைக்கு காரணம் அஜித் சார்தான். ஒருவர் ஜீரோவாக இருக்கும் போது கூட அவரை சிலர் நம்பலாம். ஆனால் நான் மைனஸில் இருந்த போது அவர் என்னை நம்பியது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அவர் என்னை நம்பினார். இது சாதாரணமாக மற்ற யாரும் செய்ய மாட்டார்கள். ரவிச்சந்திரன் போல அஜித்தும் எனக்கு ஒரு அப்பா’ என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார்.
மேலும் ‘குட் பேட் அக்லி திரைப்படத்தை நான் ஒரு ரசிகனின் மனநிலையில் இருந்து எடுத்தேன் ஆனால் அடுத்து அஜித் சாரை வைத்து நான் இயக்கவுள்ள படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என எல்லோருக்கும் பிடிக்கும். குடும்ப படமாக, அதேநேரம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக்சன் காட்சிகளும் இதில் இருக்கும்’ என சொல்லி இருக்கிறார்.