கைதி, மாஸ்டரில் ஏன் லாஜிக் பாக்கல?!.. ஹேட்டர்ஸை வெளுக்கும் பிரபலம்…
Coolie: லியோ படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம்தான் கூலி. ரஜினியுடன் லோகேஷ் கூட்டணி அமைத்ததால் இப்படத்திற்கு பெரிய ஹைப் உருவானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜெயிலரை போலவே எல்லா மொழியிலும் வசூலை அள்ள இந்த படத்திலும் நாகார்ஜுனா, சவுபின் சாகிர், உபேந்திரா, அமீர்கான் போன்ற மற்ற மொழி நடிகர்களை கொண்டு வந்து நடிக்க வைத்தார்கள். மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியானபோது படத்திற்கு அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. கதை, திரைக்கதை தெளிவாக இல்லை, படத்தில் லாஜிக் இல்லை.. படம் பார்க்கும்போது பல கேள்விகள் வருகிறது.. ஆனால் அதற்கு பதில் இல்லை என்றெல்லாம் பல விமர்சகர்களும், ரசிகர்களும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
ஒருபக்கம் புளூசட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றினார்கள். இது ஒரு குப்பை படம் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார் மாறன். அவர் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதித்யா டிவி ஆதவன் ‘புளுசட்டை மாறனுக்கு ஒரு படத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? ரஜினி சாரின் வயது 74. மாறனின் வயது 53.
சினிமாவில் ரஜினிக்கு இருக்கும் அனுபவம்தான் மாறனின் வயது. அவர் என்ன அப்படி சூப்பரான படத்தை எடுத்து விட்டார்? அவர் இங்கு விமர்சனம் செய்தது போல் ஆந்திராவில் விமர்சனம் செய்தால் வாயை உடைத்து விடுவார்கள். ரஜினியை நக்கலடிப்பது போல் பாலகிருஷ்ணாவை செய்தால் அவரின் கதி அவ்வளவுதான்’ என்றெல்லாம் காட்டமாக பேசி இருந்தார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆதவன் ‘கூலி படத்தில் இவ்வளவு லாஜிக் பார்க்கிறார்கள்.. ஆனா இதே லோகேஷ் எடுத்த கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் யாரும் லாஜிக் பார்க்கல.. கைதி படத்துல ஒரு கைதி எப்படி மிஷன் ஜன் ஆபரேட் பண்றாரு? மாஸ்டர் படத்துல விஜய் புரபஸரா காட்டுறாங்க.. ஆனா அவரு எப்படி கிளைமாக்ஸ்ல வில் எடுத்து கரெக்ட்டா அம்பு விடுறார்? சினிமால இவ்வளவு லாஜிக் பார்க்க தேவையில்லை. நடக்காத விஷயத்ததான் சினிமால காட்டுறாங்க’ என பொங்கியிருக்கிறார்.
