Ravimohan: உங்க சண்டையில் ரவிமோகன் நிலைமைய யோசிச்சீங்களா? ஃபோக்கஸ் போயிடுச்சே
Ravimohan: சமீபத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது பாவனா மற்றும் யோகிபாபு சம்பந்தப்பட்ட பிரச்சினைதான். நாம ஒன்னு நினைக்க அங்க ஒன்னு நடக்குதுனு கதையா அன்று நடந்த விழாவில் நிலைமையே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல பிரச்சினைகளுக்கு பிறகு இப்போதுதான் புதுசா வாழ்க்கையை தொடங்கலாம்னு ரவிமோகன் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இது பெரிய அளவில் பப்ளிசிட்டி ஆக வேண்டும் என்று நினைத்து பல டாப் செலிபிரிட்டிகளை அந்த விழாவிற்கு அழைத்திருந்தார். சொல்லப்போனால் அன்று நடந்த விழாவுக்கு கோடிகள் பல செலவாகியிருக்கும். அதில் சில பிரபலங்கள் பணம் கொடுத்தால் தான் வருவேன் என்றுகூட சொல்லியிருப்பார்கள். அதனால் அவர்களையும் சமாளித்து வரவழைக்க வேண்டும்.
இப்படி பல கோடிகளை போட்டு அந்த விழாவை நடத்தியிருக்கிறார் ரவிமோகன். ஆனால் இப்போது நடக்கிறது என்ன? அவருடைய தயாரிப்பு நிறுவனத்தை பற்றி பேசாமல் அங்கு நடந்த பிரச்சினையை பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் யோகிபாபு பாவனா சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதாவது பாவனாவுக்கும் யோகிபாபுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை சண்டை இருந்தாலும் அதை இப்படியா பயன்படுத்திக் கொள்வது. மைண்ட் வாய்ஸ் கேம் என்ற பெயரில் ஒரு கேள்வியை பாவனா கேட்க அதற்கு யோகிபாபு ஒரு பதிலை கூற அப்படியே பாவனா அதை கடந்துபோயிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு நல்லவர் மாதிரி நடிக்காதீர்கள் என்று சொன்னது ஏற்றுக் கொள்ள முடியாதது.
அப்பவே ரவிமோகன் மனசில் ஓடியிருக்கும் ‘ நிலைமை வேறு எங்கேயோ திரும்புதே’ என்று. அதாவது இவ்ளோ கோடியை முதலீடு செய்திருக்கிறோம். இவர்கள் பிரச்சினையில் எல்லாமே பாழாகிவிடுமோ என்றுதான் நினைத்திருப்பார். அவர் நினைத்த மாதிரிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அன்று நடந்த விழாவில் ஒரு சில படங்களின் ப்ரோமோ வீடியோ எல்லாம் வெளியானது. அதை பற்றி இப்போதுபேசுகிறோமா? இல்லையே என அந்தணன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் .
