அஜித் விஜய்க்கு வைக்கப்படும் கோரிக்கை.. குட் பேட் அக்லி டீஸர் ஏற்படுத்திய தாக்கம்

அஜித்தின் அபார வளர்ச்சி: ஒருவரின் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அபார வளர்ச்சியை அடைந்திருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியானதிலிருந்து கோடம்பாக்கம் ஒரே பரபரப்பாக இருக்கிறது. இதைப் பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சில சுவாரசிய தகவல்களை கூறி இருக்கிறார். ரஜினியைப் போல அஜித்தும் ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்துதான் வந்திருக்கிறார்.
ஒரு ஆம்லெட் கேட்டதற்கு கோழி இன்னும் முட்டை போடல என ரஜினியிடம் சொன்ன உதவியாளர் அதே ரஜினி ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வந்த பிறகு காடை, கோழி என அசைவ உணவுகளை பரிமாறினாராம். ரஜினி அவரிடம் ‘பேசும் பொழுது பார்த்து பேசணும்’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார் .அப்படித்தான் அஜித்தும் அவருடைய ஆரம்ப காலங்களில் முதல் படத்திலிருந்து சில அவமானங்களை சந்தித்திருக்கிறார் .
அஜித்துக்கு ஏற்பட்ட அவமானம்: எல்லோருக்கும் நாற்காலி கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் ஸ்டூல் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். ஆப்பிள் ஜூஸ் கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் டீ கொடுத்திருக்கிறார்கள். 2 ஸ்டார் ஹோட்டல் கொடுக்கும் பட்சத்தில் இவருக்கு மட்டும் ஒரு சிறிய லாட்ஜில் அறை கொடுத்திருக்கிறார்கள். இப்படி பல அவமானங்களை சந்தித்து விட்டு தான் வந்தவர் அஜித்.
ஆனால் இன்று அவருடைய அபார வளர்ச்சியை பார்க்கும் பொழுது அவரை அவமானப்படுத்தியவர்களுக்கு நாம் தெரியாமல் செய்து விட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கும். டீஸர் வெளியானதும் ஒரு தியேட்டர் உரிமையாளர் என்னிடம் வந்து இந்தப் படத்தை பொங்கலுக்கு விட்டிருக்கலாமே சாமி என புலம்பினாராம். அப்படி ஒரு பேன் பாய் சம்பவமாகத்தான் இந்த படம் உருவாகி இருக்கிறது.
ஃபேன் பாயாக ஆதிக் செய்த சம்பவம்: ஆதிக் அஜித்தை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தியிருக்கிறார். ஏன் அஜித்தே இந்த படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவதை ஆச்சரியமாக பார்த்திருப்பார். ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்கும் பொழுது அஜித்திற்கு 7 ,8 வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி படங்களை பண்ணியிருக்கலாமே என நினைக்க வைத்திருக்கும். தான் எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் விடாமுயற்சி போன்ற படம், வலிமை போன்ற படம் என நடித்து வந்தார் அஜித்.
ஆனால் ரசிகர்களுக்கு எது தேவை? எதைக் கொடுத்தால் அவர்கள் திருப்தி அடைவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தான் இந்த குட் பேட் அக்லி திரைப்படம். ஒரு ரசிகனாக படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக். ஆந்திரா, தெலுங்கில் உள்ளவர்களே ‘ஒரு டீஸரை போய் இப்படி கொண்டாடுகிறார்களே’ என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்களாம். அதனால் இந்த படம் ஒரு பெரிய விருந்தாகத்தான் ரசிகர்களுக்கு இருக்கப் போகிறது .
சரியாக சொன்ன ஷாம்: அதிலும் சமீபத்தில் நடிகர் சாம் கூறும் பொழுது கூட ரஜினி- கமல், அஜித் -விஜய் இவர்களுக்கு பிறகு யாருமே அப்படி ஒரு போட்டியில் இல்லை. இனிமேல் யாரும் அப்படி இருக்கவும் மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரு மாஸை இவர்கள் கிரியேட் செய்துவிட்டு போயிருக்கிறார்கள் .இனிமேல் அந்த மாதிரி யாரும் வரவும் மாட்டார்கள் என சொல்லி இருந்தார். ஆனால் அதுதான் உண்மை .இப்படி ஒரு பெரிய மாஸான நடிகர்கள் இப்போது சினிமாவை விட்டு போகும் போது தியேட்டர் உரிமையாளர்களின் நிலைமை என்னவாகும் ?
அதனால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் தேர்தல் முடிந்த பிறகு விஜய்க்கு ஒரு கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். வருசத்துக்கு ஒரு படம், 15 நாள் கால்ஷீட் கொடுத்து விட்டு நடிங்கள் என சொல்லப் போவதாக கூறியிருக்கிறார்களாம் .இன்னொரு பக்கம் அஜித் கார் ரேஸ் என அவருடைய பொழுதுபோக்கு பிடித்த விஷயம் எதுவோ அதில் கவனம் செலுத்தி வருகிறார். அவரிடமும் வருடத்திற்கு மூன்று படம் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப் போகிறார்களாம்.
ஏனெனில் இவர்களால் தான் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் வந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் சினிமாவை விட்டு விலகும் பொழுது எங்களின் நிலைமை என்னவாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் புலம்புகிறார்கள் என செய்யாறு பாலு இந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.