கொஞ்சம் அவசரப்பட்டோமோ? திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் பரிதாப நிலை

by Rohini |
keerthy
X

தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு பரிச்சயமான நடிகையாக மாறினார். ஹிந்தியில் இவர் முதன்முதலில் அறிமுகமான பேபி ஜான் திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது .

இந்த நிலையில் கடந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நெருக்கமான திரை பிரபலங்கள் மட்டுமே கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக நடிகர் விஷாலுக்கு கீர்த்தி சுரேஷை மணம் முடிக்க பெண் கேட்டு சென்றதாகவும் ஒரு தகவல் இருந்தது.

அப்போது கூட கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வருவதாக தெரிவித்து இருந்தார். அந்த ஒரு செய்தி வைரலானது. மகாநடி படத்தில் சாவித்திரியின் பிம்பத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து தேசிய விருதை தட்டிச் சென்றார் கீர்த்தி சுரேஷ். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை உள்வாங்கிக் கொண்டு அப்படியே வெளிப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த நடிகை.

இந்த நிலையில் நடிகைகளை பொறுத்த வரைக்கும் திருமணம் ஆன பிறகு அவர்களுடைய அதிர்ஷ்டம் தான் அடுத்து அவர்களுடைய கேரியரை கொண்டு செலுத்தும். அதைப்போல தான் கீர்த்தி சுரேஷ்சுக்கும். திருமணமான பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு படங்களுமே இல்லை. ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அதுவும் அசோக் செல்வனுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் முன்பு மாதிரி முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கீர்த்தி சுரேஷை யாரும் அணுகவதில்லை என தெரிகிறது . அதனால் இனிமேல் கீர்த்தி சுரேஷின் கெரியர் எந்த மாதிரியான ஒரு திருப்பத்தை சந்திக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நயன்தாராவை பொருத்தவரைக்கும் திருமணத்திற்கு பிறகு லைம்லைட்டில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story