வெற்றிமாறனிடமும் வேலையை காட்டும் சூர்யா!.. இப்படியே போனா மார்கெட் காலி!....

by Rohini |
surya
X

சூர்யா மீது அடுத்தடுத்து பல சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கின்றன. புறநானூறு படத்தில் அவர் விலகியதில் இருந்தே அவர் மீது பல சர்ச்சைகள் கிளம்பி கொண்டு இருக்கின்றன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்த முடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்திலும் ஏதோ பிரச்சனையை செய்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. அதாவது படத்தின் சில காட்சிகளில் மாற்றம் செய்யும்படி சூர்யா கேட்டதாகவும் அதற்கு கார்த்திக் சுப்பாராஜ் மறுத்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.

கடைசியில் சூர்யாவின் நண்பர் ஒருவர் மூலமாக இந்த பிரச்சனை சமூகமாக முடிக்கப்பட்டு கடைசியில் சூர்யா கேட்டுக்கொண்டதன் பேரில் காட்சிகளில் மாற்றம் செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்படியே போனால் சூர்யாவின் நிலைமை என்னவாகும் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது .இந்த நிலையில் சூரியா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது வாடிவாசல் திரைப்படம் தான். கங்குவா படத்திற்கு முன்பாகவே வாடிவாசல் திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் சூர்யா கங்குவா திரைப்படத்தில் நுழைய வெற்றிமாறன் விடுதலைப் படத்தில் பிசியாக இருக்க வாடிவாசல் திரைப்படம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பிறகு மீண்டும் எப்பொழுது வாடிவாசல் தொடங்கும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டே வந்தனர். ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து முடித்த பிறகு சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தான் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆர்.ஜே பாலாஜி படத்திற்கு பிறகு சூர்யா லக்கி பாஸ்கர் படை இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.


ஏனெனில் சூர்யா பல இயக்குனர்களிடம் பவுண்டட் எஸ்கிரிப்ட் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அதனால் தான் வாடிவாசல் படமும் தாமதமாகிறது என கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது. சூர்யா கேட்பதைப் போல வெற்றி மாறன் பவுண்டட் ஸ்க்ரிப்ட் தயார் செய்து அதன் பிறகு தான் இந்த படத்தை தொடங்குவார் என்றும் தெரிகிறது. வெற்றிமாறன் மட்டும் இல்லை இனிமேல் எந்த இயக்குனர்கள் சூர்யாவின் கால் சீட்டை கேட்டாலும் முதலில் பவுண்டட் ஸ்கிரிப்ட்டை தான் சூர்யா கேட்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story