வேட்டையன் படம் பார்த்த பிரபலம்... விழுந்து விழுந்து சிரித்த ரஜினி!

by BALU |   ( Updated:2024-10-30 12:30:45  )
Rajnikanth
X

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க லைகா நிறுவனம் தயாரித்த படம் வேட்டையன். சமீபத்தில் ரிலீஸான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத்.

இந்தப் படத்தை சமீபத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பார்த்துள்ளார். இவர் பார்த்ததும் என்ன செய்தார் என்பதை சுவைபட சொல்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன். வாங்க என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.

சீமான் வேட்டையன் படத்தைப் பார்த்துட்டு படக்குழுவுக்கு 'வாழ்த்துக்கள்' சொல்லிருக்காரு. போன்லயும் பேசிருக்காரு. 'இருங்க ஒரு முக்கியமான நபர்கிட்ட பேசுங்க'ன்னு சொல்லிட்டு கான்பரன்ஸ் கால் போட்டுருக்காங்க. யாருன்னே ஆனா சொல்ல வில்லையாம். இவர் எதிர்முனையில சுபாஷ்கரன்தான் இருக்காரு நினைச்சிருக்காரு.

'தம்பி சொல்லுங்க தம்பி. எப்படி இருக்கீங்க?'ன்னு கேட்டுருக்காரு. 'நான் ரஜினிகாந்த் பேசறேன்'னு சொன்னதும்... 'ஐயா நான் தம்பி சுபாஷ்கரன்னு நினைச்சேன்... நல்லாருக்கீங்களாய்யா'ன்னு பேசிருக்காரு சீமான். அப்புறம் படம் பத்தி நிறைய பேசிருக்காரு. 'இந்த டைப் ஆப் படங்களே நடிங்க.

ரொம்ப நல்ல கருத்துக்கள் எல்லாம் படத்துல இருக்கு'ன்னு சீமான் சொல்ல. 'இந்த மாதிரி கதைகளைத் தான் நானும் கேட்டுக்கிட்டு இருக்கேன்'னு ரஜினி சொன்னாராம். நான் ஒரு டயலாக்கை ரொம்ப ரசிச்சேன். எந்தப் பொண்டாட்டிப் புருஷன் பேச்சைக் கேட்குறான்னு இவர் சொல்ல, அவரு விழுந்து விழுந்து சிரிக்க ஒரு மாதிரி நல்ல ஜோவியலான உரையாடலா இருந்ததாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


சிலர் நான் ரஜனி பேசறேன்னு சொன்னதும் ஆடிப் போயிருப்பாங்க. ஆனா சீமான் அஞ்சாத சிங்கம் அல்லவா. அவர் அதையும் சமாளித்துக் கொண்டு லாவகமாகப் பேசி சூப்பர்ஸ்டாரையே சிரிக்க வைத்துவிட்டாரேன்னு பார்க்கும்போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் பொருத்தவரை இந்தப் படம் பெரிய அளவில் வசூலை ஈட்டவில்லை என்றாலும் அழுத்தமான கதை.

ரஜினிக்கும் பிடித்து இருந்ததால் தான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் இதுபோன்ற கருத்துள்ள படங்களில் நடித்தது ஒன்றும் அவருக்குப் பெரிய பின்னடைவைத் தந்துவிடாது என்றே சொல்லலாம். அவரைப் பொருத்தவரை அவர் யானை அல்ல. குதிரை. விழுந்தால் டப்புன்னு எழுந்து விடுவார். அடுத்தடுத்த படங்களில் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடுவார் என்றே நம்பலாம்.

Next Story