‘பைசன்’ படம் பார்த்து சிம்பு இப்படி சொல்வாருனு நினைக்கல! எமோஷனலான மாரிசெல்வராஜ்
பரியேறும் பெருமாள் தொடங்கி வாழை வரை தனது அழுத்தமான படைப்பால் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் மாரிசெல்வராஜ். சமீபத்தில் அவர் இயக்கிய பைசன் திரைப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தூத்துக்குடியில் பிறந்து கபடியில் சாதித்த மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பைசன் திரைப்படத்தை எடுத்திருந்தார்.
இந்தப் படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பசுபதி முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பயோபிக்கை பொறுத்தவரைக்கும் அதன் கிளைமாக்ஸை முன்பே அறிந்துதான் மக்கள் படத்தை பார்க்கவருவார்கள். அதையும் மீறி அவர்களை திருப்திப்படுத்தி வெளியே அனுப்புவதுதான் ஒரு நல்ல படைப்பாளிக்கு அழகு.
அந்த வகையில் மாரிசெல்வராஜ் அதை சிறப்பாக செய்திருந்தார். மணத்தி கணேசனின் வாழ்க்கையை மட்டுமில்லாமல் தென்மாவட்டங்களில் 90கள் காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்களையும் சேர்த்தேதான் இந்தப் படத்தில் காட்டியிருந்தார். துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது. மாரிசெல்வராஜை பொறுத்தவரைக்கும் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானதாகவே காணப்படும்.
அப்படித்தான் பைசன் திரைப்படத்திலும் அவரின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் இந்த படத்தை மனதார பாராட்டினார்கள். குறிப்பாக ரஜினி படத்தை பார்த்துவிட்டு மாரிசெல்வராஜை அழைத்து அவரின் வாழ்த்துக்களை கூறினார். இந்த நிலையில் சிம்பு பைசன் படத்தை பார்த்துவிட்டு சொன்ன அவருடைய கருத்து என்னை மிகவும் எமோஷனலாக்கி விட்டது என மாரிசெல்வராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது ஒரு கட்டத்திற்கு பிறகு நீங்கள் வேலை செய்ய வேலை செய்ய நீங்கள் அறியாமலேயே ஒரு அற்புதம் செய்யக் கூடிய ஆளாக நீங்கள் மாறிவிடுவீர்கள். நீங்கள் என்ன செய்தாலும் அது அற்புதத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். அப்படியொரு அற்புதம் இந்தப் படத்தில் நடந்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று கூறினாராம். இது மாரிசெல்வராஜுக்கு ஒரு பயங்கரமான எமோஷனல் மாதிரி இருந்ததாக கூறியிருக்கிறார்.
