12 வயசு வித்தியாசம்!.. விஷாலுடன் காதல் வந்தது எப்படி?!. வெட்கப்படும் சாய் தன்ஷிகா!..

by MURUGAN |
vishal
X

கோலிவுட்டில் முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த விஷால் ஒருவழியாக சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துவிட்டார். சாய் தன்ஷிகா நடித்து உருவான யோகி டா படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இதை அனைவரும் அறிவித்துவிட்டார்கள்.

‘விஷாலும், சாய் தன்ஷிகாவும் காதலில் இருக்கிறார்கள். செல்லத்துக்கு வெட்கத்தப்பாரு’ என இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மேடையில் இதை உடைக்க விஷால் வெட்கப்பட்டுக்கொண்டே சிரித்தபடி தலையை குனிந்துகொண்டிருந்தர். அதன்பின் பேசிய பேரரசு ‘விஷால் சார் எனக்கு வருத்தம். 2 மாசம் கிசுகிசு பரவ விடணும். அப்புறம்தான் சொல்லணும். நீங்க என்னடான்னா முதல்லயே கிளைமேக்ஸ சொல்லி சர்ப்பரைஸ் இல்லாம பண்ணிட்டீங்க’ என்றார்.

அதன்பின் பேசிய தன்ஷிகா ‘என்ன பேபி சொல்லிடலாமா?’ என விஷாலை பார்த்து வெட்கப்பட்டார். இது எங்களின் திருமணத்தை அறிவிக்கும் மேடையாக மாற்ற வேண்டும் என நாங்கள் நினைக்கவே இல்லை. அதுவாக அமைந்துவிட்டது. நானும், விஷாலும் 15 வருட நண்பர்கள். ஆகஸ்டு 29ம் தேதி திருமணம் செய்யப்போகிறோம். எல்லோரும் எங்களை வாழ்த்துங்கள்’ என பேசினார்.


அவருக்கு பின் பேசிய விஷால் ‘ சாய் தன்ஷிகாவை சந்தோஷமாக வைத்துகொள்வேன். இப்போது அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு எப்போதும் இருக்கும். திருமணத்திற்கு பின்னரும் சாய் தன்ஷிகா சினிமாவில் நடிப்பார்’ எனப்பேசியிருந்தார். விஷால் சாய் தன்ஷிகாவைத்தான் திருமணம் செய்யப்போகிறார் என்கிற செய்தி நேற்று காலையிலேயே பரவ துவங்கியது. எனவே, ரசிகர்களுக்கு இது சர்ப்பரைஸ் செய்தியாக அமையவில்லை.

நிகழ்ச்சிக்கு பின் பேசிய தன்ஷிகா ‘திருமணம் வரை இதை ரசிகசியமாக வைக்கவே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால், யாரே கசிய விட்டுவிட்டார்கள். அவர் யார் என தேடி வருகிறேன் (சிரிக்கிறார்). இன்னும் 2 மாதங்கள் சுதந்தரமாக இருக்கலாம் என நினைத்தேன். விஷால் மீது ஒரு நடிகருடன் காதல் என்பதால் அது முடியாமல் போய்விட்டது’ என பேசினார். அப்போது ‘எந்த தருணத்தில் உங்களுக்கு விஷால் மீது காதல் வந்தது?’ என நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன தன்ஷிகா ‘இதுபற்றி வேறு பேட்டிகளில் சொல்கிறேன். இது யோகி டா விழாவாக மட்டுமே இருக்கட்டும்’ என எஸ்கேப் ஆனார்.

விஷாலின் வயது 47. தன்ஷிகாவின் வயது 35. ஒருவருக்கும் 12 வயது வித்தியாசம் இருக்கிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேல் இருவரும் நண்பர்களாக இருந்தார்கள். விஷால் முரட்டு சிங்கிளாகவே இருந்ததால் நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.


Next Story