பாகுபலியை தாண்டுவோம்!. ரஜினி, விஜய், அஜித்துக்கு அப்புறம் அல்லு அர்ஜுன்தான்!.. என்னப்பா சொல்றீங்க!..

by Murugan |
பாகுபலியை தாண்டுவோம்!. ரஜினி, விஜய், அஜித்துக்கு அப்புறம் அல்லு அர்ஜுன்தான்!.. என்னப்பா சொல்றீங்க!..
X

Pushpa 2: சமீபகாலமாகவே தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதற்கு காரணம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றிதான். தமிழ்நாட்டில் பாகுபலி 2 படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதேபோல், கேஜிஎப் 2 படமும் 100 கோடி வசூலை அள்ளியது. அதேநேரம், தெலுங்கில் எல்லா படங்களும் டப் செய்யப்பட்டு வெளியாவதில்லை. பிரபாஸ், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் படங்கள் மட்டுமே டப் செய்யப்படுகிறது. இதில், பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோரின் படங்கள் நல்ல வசூலை பெறுகிறது.

பாகுபலி படத்திற்கு பின் பேன் இண்டியா ஸ்டாராக மாறிவிட்டார் பிரபாஸ். சலார், சாஹோ, ஆதிபுருஷ், கல்கி என அவரின் பல படங்கள் இதுவரை தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிவிட்டது. பாகுபலியை போலவே அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 படமும் தமிழ்நாட்டில் ஹிட் அடித்தது.


அதைத்தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது. முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இப்படத்தையும் இயக்கியிருகிறார். முதல் பாகத்தின் இறுதியில் வில்லனாக வந்து கலக்கிய பஹத் பாசில் 2ம் பாகத்தில் கலக்கி இருப்பார் என நம்பப்படுகிறது. அவர் இல்லாமல் மேலும் சில வில்லன்களும் இந்த பாகத்தில் இருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக வந்த ராஷ்மிகா மந்தனா இந்த பாகத்தில் அவரின் மனைவியாக நடித்திருக்கிறார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படம் ரிலீஸுக்கு முன்பே தியேட்டர் உரிமை, இசை உரிமை, சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை என 1000 கோடி வசூலை தட்டி தூக்கியிருக்கிது.

புஷ்பா 2 படத்தை தமிழகத்தில் வினியோகம் செய்யும் உரிமையை கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஏஜிஎஸ் ‘தமிழகத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் முதல் நாளில் டபுள் டிஜிட் வசூலை பெறும். அதே வசூலை புஷ்பா 2வும் பெறும் என நாங்கள் நம்புகிறோம்., விஜயின் கோட் படம் போலவே புஷ்பா 2 படமும் தமிழகத்தில் 806 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. பாகுபலி 2 படம் தமிழகத்தில் முதல் நாள் 80 கோடி வசூலை பெற்றது. புஷ்பா 2வும் அந்த வசூலை தொடும் என நம்புகிறோம்’ என சொல்லி இருக்கிறது.

Next Story