தயாரிப்பாளர் ஐசரி கணேஷா? அஜித்தா? நடக்குறத பார்த்தா ஒரு வேளை இருக்கும்

ajith
குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் ஆதிக் இணைய போகிறார்கள் என உறுதிப்பட தெரிந்து விட்டது. அந்த படத்திற்கான பணிகளும் துவங்கி விட்டன. தற்போது அஜித் கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். ஐரோப்பாவில் நடைபெறும் அந்த கார் ரேஸை முடித்துவிட்டு இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்புகிறார் அஜித். அதன் பிறகு தான் அவருடைய அடுத்த பட அப்டேட்டுகள் குறித்து அடுத்தடுத்த செய்திகள் வெளிவரும் .
அதுவரை யார் அந்த படத்தில் நடிக்க போகிறார் என்பதைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் தான் என உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இவர்கள் இணையும் இந்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் எழுந்தன. ஆரம்பத்தில் இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கப் போகிறார் என்று கூறி வந்தார்கள் .
ஆனால் இந்த படத்தின் கதை பற்றிய விவாதம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது .பொதுவாக ஒரு படத்தின் கதை விவாதத்தில் இருக்கும் அனைத்து செலவுகளையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமே ஏற்கும். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் இதுவரை நடந்த விவாதத்தில் நடந்த செலவுகளை அஜித் தரப்பிலிருந்து தான் மேற்கொண்டு இருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது .
அதனால் தயாரிப்பாளர் அஜித்தா அல்லது ஐசரி கணேசா என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதுமட்டுமல்ல ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்துக் கொண்டு அஜித் தரப்பிலிருந்து அனிருத்தையும் சந்திக்க வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது .அதனால் இந்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்பது பற்றி இதுவரை உறுதியாகாத தகவலாக இருக்கிறது.
அஜித் ஆதிக் கூட்டணியில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள். இன்னொரு பக்கம் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர் .அதனால் அவரும் இந்த படத்தின் ஒரு சாய்ஸாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது .
isari
கூடிய சீக்கிரம் இந்த படத்தின் முழு விவரம் பற்றிய தகவல் வெளியாகும். அது எல்லாமே இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் முடிவாகும். தற்போது அஜித் தன்னுடைய ரேஸ் காரை ஐரோப்பாவில் இருக்கும் ரசிகர்கள் வந்து வந்து பார்த்துவிட்டு செல்லும் ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் அங்குள்ள மக்கள் அவருடைய காரில் உட்கார்ந்து புகைப்படம் எடுப்பதும் கூடவே அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதுமாக இருந்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றன.