Categories: Cinema News

Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?

அஜீத் படங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் படத்தின் தலைப்புகள் பாசிடிவ் எண்ணங்களுடன் தான் வரும். வீரம், வலிமை, துணிவு, நேர் கொண்ட பார்வை என்று சொல்லிக் கொண்டே போகலாம். இப்போ கூட விடாமுயற்சி என்ற படத்தில் தான் நடித்துள்ளார்.

இந்தப் படங்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை உண்டு. எல்லாவற்றிலும் தைரியம் இருக்கும். படத்தின் பெயரில் இருக்கும் அந்த துணிச்சல் கதையிலும் சரி. கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி. எப்போதுமே உண்டு.

வீரம்

Also read: Delhi Ganesh: மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்கு மரியாதை செலுத்திய விமானப்படை!.. நெகிழ்ச்சி சம்பவம்…!

அஜீத் நடிச்ச படத்துல ரொம்பவே மாஸான படம் வீரம். அதுல என்ன செய்வாருன்னா நல்லா சாப்பாடு போட்டு கேட்டைப் பூட்டி விட்டு அவனுக்கு உடல்ல கொஞ்சம் தெம்பு வந்ததுக்கு அப்புறமா நையப் புடைப்பார்.

அவன் வீக்கா இருக்கும்போது அடிக்கக்கூடாது. அப்படி ஒரு உயர்ந்த கொள்கையோட அந்தப் படத்துல இருப்பார். அதுமாதிரி ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையிலும் நடந்துள்ளது. என்னன்னு பார்க்கலாமா…

veeram

தமிழ்த்திரை உலகில் அஜீத் மாதிரி ஒரு துணிச்சலான ஆள் யாருன்னு சொன்னா விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி பல சம்பவங்களை அவரது திரையுலக வாழ்வில் பார்த்திருப்போம். சமீபத்தில் பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். ஆச்சரியமான ஒன்று தான். என்னன்னு பார்க்கலாமா…

ஆண்மை இருக்கா..?

திரைச்சுவைன்னு ஒரு பத்திரிகைல அஜீத் திருமணம் பண்ணிக்கிட்டாரு. ரெண்டு மூணு வருஷமா குழந்தையே இல்லை. ஆண்மை இருக்கான்னு சந்தேகமா இருக்குன்னு எழுத ஆரம்பிச்சிட்டாங்களாம்.

ஆனா என்ன ஒரு துரதிர்ஷ்டம்? எழுதுன பத்திரிகையாளரே விஜயா ஹாஸ்பிட்டல்ல ஹார்ட் அட்டாக்னு அட்மிட் ஆகி இருந்தாராம். இரண்டரை லட்ச ரூபாய் கட்டணுமாம். என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருந்துருக்காங்க.

அஜீத் உதவி

vidamuyarchi

அந்த நேரம் தகவலைக் கேள்விப்பட்டு அஜீத் ஓடிவந்து அவருக்காக பில் கட்டி இருக்கிறார். அப்போ பிஆர்ஓ அவர் கிட்ட என்னன்னு கேட்டுக்காரு? அதுக்கு ‘தல’ சொன்ன பதில் தான் அல்டிமேட். என்னன்னு பாருங்க.

‘ஈகோ’ பார்க்கக்கூடாது

Also read: Kamalhassan: எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்?!… அஜித் ரூட்டை பின்பற்றிய கமல்ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இந்த நேரத்துல நம்ம அவரைப் பழி வாங்கக் கூடாது. வலுவாக இருக்கும்போது தான் சண்டை பிடிக்கலாம். ஒரு நிருபர் வலு இழந்து ஹாஸ்பிட்டலில் போராடிக்கிட்டு இருக்கான். அப்போ போய் நம்ம ஈகோ பார்க்கக்கூடாதுன்னு சொல்லிருக்காரு ‘தல’. திரைப்பட உலகத்தில் யாருக்குமே இந்த மனசு இல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v