விடாமுயற்சி விவகாரம்!. அஜித் மேல என்ன தப்பு?.. எல்லாம் லைக்காவோடது!.. குவியும் ஆதரவுகள்!...
Vidaamuyarchi: துணிவு படத்திற்கு பின் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்புக்கொண்ட படம்தான் விடாமுயற்சி. முதல் கோணல் முற்றிலும் கோணல் என சொல்வது போல துவங்கியதிலிருந்தே இந்த படம் பல பிரச்சனைகளை சந்தித்தது. இயக்குனர் மட்டுமே முடிவான நிலையில் இதுதான் கதை என முடிவு செய்யவே 6 மாதங்கள் ஆகிவிட்டது.
ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் பட கதையை அடிப்படையாக வைத்து கதை உருவாக்கப்பட்டு அஜர்பைசான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கியது. மங்காத்தா படத்துக்கு பின் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், லியோ படத்தில் வில்லனாக கலக்கிய ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் வில்லன் என சொல்லப்பட்டது. அதோடு பிக்பாஸ் ஆரவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், பல காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடை பட்டது. குறிப்பாக இந்த படம் உருவானபோது லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஏனெனில், இந்தியன் 2, விடாமுயற்சி, லால் சலாம் என ஒரே நேரத்தில் 3 படங்களை அந்நிறுவனம் தயாரித்தது. அதன்பின் ரஜினியின் வேட்டையன் படமும் சேர்ந்துகொண்டது. எனவே, விடாமுயற்சி படத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் லைக்கா நிறுவனம் திணறியது.
அஜித்தும் பல மாதங்கள் கால்ஷீட் கொடுத்து இப்படத்தில் நடித்து கொடுத்தார். ஆனால், லைக்கா மீது ஏற்பட்ட அதிருப்தியில் விடாமுயற்சியை விட்டுவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார். விடாமுயற்சியை விட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்தது.
அதன்பின் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது என சொல்லி வீடியோவை வெளியிட்டார்கள். ஆனால், ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருக்கிறது என சொன்னார்கள். திடீரென அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி திரிஷாவுடன் சவதீகா பாடலுக்கும் நடனமாடினார்.
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில்தான் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் இல்லை என லைக்கா நிறுவனம் செய்தி வெளியிட்டு அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியது. பின்னணி இசை, சென்சார் உள்ளிட்ட பணிகள் முடியவில்லை என ஒருபக்கம் சொன்னாலும் வியாபார ரீதியாக வேறு சில காரணங்களும் சொல்லப்படுகிறது.
தனது படம் பொங்கலுக்கு வர வேண்டும் என்கிற ஆசையில் அஜித் இருந்திருப்பார். அவருக்கும் இது கோபத்தையே ஏற்படுத்தியிருக்கும். ஆனால், சிலரோ இதற்கு அஜித் காரணம் என்பது போல சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். இதையடுத்து விடாமுயற்சி ரிலீஸ் ஆகாமல் போனதற்கு முழுக்க முழுக்க லைக்கா மட்டுமே காரணம். அஜித் தொழிலில் நேர்மையாக இருக்கும் ஒரு நடிகர். நடித்து கொடுத்து, டப்பிங் பேசி முடித்து கொடுத்துவிட்டார்.
இந்த வயதிலும் பெரும்பாலான காட்சிகளில் டூப் போடாமல் நடித்து கொடுக்கிறார். விடாமுயற்சி படத்திற்காக அவர் தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்துவிட்டார். லைக்கா செய்த தவறுக்கு அஜித்தை விமர்சிப்பதில் நியாயம் இல்லை என பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.