
Cinema News
Ajith: இந்திய சினிமாவுக்கே பெருமை!. சொன்னதை செய்த அஜித்!.. வைரல் போட்டோ!…
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக் கொண்டதால் திருமணத்திற்கு பின் அந்த பக்கம் போகாத அஜித் கடந்த சில வருடங்களாக கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இவரின் தலைமையில் ஒரு டீம் செயல்பட்டு வருகிறது.
அஜித் கலந்து கொண்ட முதல் போட்டி துபாயில் நடந்தது. அதில் அஜித்தின் டீம் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதன்பின் பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட கார் பந்தங்களில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது. சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியாவில் நடைபெற்ற 24H சீரியஸிலும் அஜித்தின் டீம் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்கள். அப்போது அவரின் மனைவி ஷாலினி, மகள் ஆகியோர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
பொதுவாக தமிழ்நாட்டு ஊடகங்களிடம் பேசாத, பேட்டி கொடுக்காத அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொள்ளும் போது அந்த நாட்டு ஊடகங்களிடம் பேசி வருகிறார். அப்போது அவர் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ஏற்கனவே மோட்டார் ஸ்போர்ட்ஸை பிரபலமாக்குவது என் ஆசை. என்னை பார்த்து என் ரசிகர்களும் அதை பின்பற்றினால் மகிழ்ச்சி என பேசி இருந்தார்.

மேலும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையும் நான் புரமோஷன் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன் அன்பு மற்றும் நலத்தின் அடிப்படையில் தான் இதை செய்கிறேன் என்றெல்லாம் சமீபத்தில் பேசி இருந்தார். தற்போது அதை அஜித் நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டார். அஜித் அணிந்துள்ள ஸ்போர்ட்ஸ் உடையில் சினிமா லோகோ பதிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காட்சியை படம் பிடிக்கும் முன் அடிக்கப்படும் கிளாப் போர்டு புகைப்படத்துடன் அந்த லோகோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில், Light, Camera, Action என்கிற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது. ஒரு சினிமாவை உருவாக்கும்போது இந்த மூன்று வார்த்தைகளைத்தான் இயக்குனர் அதிகம் பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.