சினிமாவுக்கு சின்சியரா இல்லையா அஜித்?.. 8 மாதத்தில் 42 கிலோ எடையை குறைத்தது ஏன்?..

by ROHINI |   ( Updated:2025-05-16 14:34:33  )
ajith
X

ajith

தற்போது அஜித் தீவிரமாக கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய ஒரே பேஷன் ரேஸ்தான். ஆரம்பத்தில் இருந்தே ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார் அஜித். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதையெல்லாம் நீக்கி தன்னால் முயன்ற முயற்சிகளை செய்து அந்த முயற்சியில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார் அஜித். விடாமுயற்சி படத்திற்கு பிறகு துபாய் கார் ரேஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

அந்த பயிற்சியின் போது அவருக்கு விபத்துக் கூட ஏற்பட்டது. ஆனால் அஜித்துக்கு நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை. அப்படி ஏகப்பட்ட வலிகளை கடந்து இன்று ரேஸில் தன்னுடய அணியுடன் சேர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் அஜித் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது வரை கார் பந்தயத்திற்காக 42 கிலோ எடை குறைத்துள்ளதாக கூறியிருக்கிறார் அஜித். கார் ரேஸிங் காலத்தில் படம் நடிக்காமல் பந்தயத்தில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்றும் கூறியிருக்கிறார்.

அவருடைய அடுத்த படம் நவம்பர் மாதம் 2025ல் தொடங்கி 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் அவரே தெரிவித்திருக்கிறார். இதுவரை தன்னுடைய பட அப்டேட்டை அஜித் கொடுத்ததே இல்லை. ஆனால் அந்த பேட்டியில் அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் கூறியிருக்கிறார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.அதனை தொடர்ந்து அஜித் எந்த இயக்குனருடன் இணைய போகிறார்? என்றெல்லாம் கேட்டு வந்தனர். ஆனால் மறுபடியும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் இணைய போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

Next Story