தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகள்பவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்கள் இவரை செல்லமாக தல என அழைத்துவந்தார். ஆனால், சமீபத்தில் இனி ரசிகர்கள் யாரும் என்னை தல என அழைக்கவேண்டாம் எனக்கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் அஜித்.
தற்போது அஜித் இரண்டாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹிந்தி நடிகை ஹீமா குரோஷி நடித்து வந்தாலும், அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை, படம் முழுவதும் அஜித்துடன் பயணிக்கும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை படத்தி தயாரித்த போனி கபூர்தான் இந்தப்படத்தையும் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸி, நாங்க வேற மாதிரி, அம்மா சாங் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேக்கிங் வீடியோ பார்க்கும்போதே படம் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்களை பேசி வருகின்றனர். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் விரைவில் டிரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்திற்கு சம்பளமாக அஜித் 70கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…
Karur: நடிகரும்…