Ajith: திருப்பதில் சாமி தரிசனம்!.. கம்முன்னு இருக்கணும்!.. ரசிகர்களை எச்சரித்த அஜித்!.. வைரல் வீடியோ..
நடிகர் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு பல நாடுகளிலும் நடக்கும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளப் போனார். துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் டீம் மூன்றாவது இடத்தை பெற்றது. அடுத்து ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்து கொண்டது.
அதிலும் அஜித்தின் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்து 2026ம் வருடம் மீண்டும் துபாய் அபுதாபியில் நடக்க உள்ள கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்து கொள்ளவிருக்கிறது. பல மாதங்களாகவே கார் ரேஸில் இருந்த அஜித் தற்போது அதிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறார். ஏனெனில் ஆதிக் ரவிச்சந்திர இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படம் விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதிய போஸ்டரோடு அடுத்த வாரம் வெளியாகும் என்கிறார்கள்.
எனவே இந்தியா வந்துள்ள அஜித் தற்போது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். அதோடு, தொடர்ந்து பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் இரண்டு நாட்களுக்கு முன்பு பாலக்காட்டில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு மனைவி மற்றும் மகனுடன் சென்றிருந்தார். அப்போது அஜித்தின் நெஞ்சில் வரையப்பட்டிருந்த பகவதி அம்மன் டாட்டூ கவனத்தை ஈர்த்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது அஜித் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின்போது அஜித் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைப் பார்த்த சில ரசிகர்கள் ‘தல தல’ என கத்தினார்கள். அதை பார்த்து ‘இது கோவில்.. இங்கு சத்தம் போடக்கூடாது’ என்பது போல அஜித் சகை காட்ட மொத்த கூட்டமும் சைலன்டானது.
அதன் பின் சில ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார்கள். அப்போது சிலரின் போனை வாங்கி அஜித்தே அவர்களுக்கு செல்பி எடுத்துக் கொடுத்தார் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் கார் ரேஸில் இருந்தபோது சில ரசிகர்கள் அவரை பார்த்து விசிலடிக்க அஜித் ‘இப்படியெல்லம் செய்யக்கூடாது’ என கோபத்துடன் சைகை காட்டிய வீடியோ வைரலான நிலையில், தற்போது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
