சிவாஜி புரடெக்‌ஷனில் அஜித்தா? ஏற்கனவே பட்டது போதாதா? கண்டிசன் பேரில் நடிக்கும் தல

by ROHINI |   ( Updated:2025-07-01 12:04:00  )
prabhu
X

prabhu

நேற்று சமூக வலைதளங்களில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் பற்றிய செய்தி தான் வைரலானது. அதாவது அந்த படத்திற்காக அஜித் 180 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதை கொடுப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே தான் அந்தப் படத்தை ஏற்கனவே தயாரிக்க இருந்த ஐசரி கணேஷும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் அஜித்தின் சம்பளம் மட்டுமே அதற்கு காரணம் இல்லை என இன்று தகவல் கிடைத்துள்ளது. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் அஜித் படத்தை தயாரிக்க முன் வராததற்கு காரணம் அஜித் சில கண்டிஷன்கள் போட்டிருக்கிறாராம். அந்த கண்டிஷனாலதான் தயாரிப்பு நிறுவனங்கள் அவருடைய படத்தை தயாரிக்க முன்வர தயங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.

அதில் முதல் கண்டிஷன் அஜித் தனக்கு முன்பணமாக பெரும் தொகையை எதிர்பார்க்கிறாராம். வழக்கமாக 50 சதவீதம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு மீதி 50 சதவீதம் தொகையை மாதம் 5 கோடி என்ற அளவில் அவர் சம்பளமாக பெற்றுக்கொள்வார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெரும் தொகையை முன்பணமாக கேட்கிறாராம். மீதி தொகையை போஸ்ட் டேட்டட் செக்காக அதை முன்னாடியே கொடுத்து விடும்படி கேட்கிறாராம்.

குறிப்பிட்ட தேதியில் அந்த செக்கை ஹானர் பண்ண முடியவில்லை என்றால் அது கிரிமினல் வழக்காக முடிந்துவிடும். அந்த ஒரு பயத்தினால் கூட தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை தயாரிக்க முன் வருவதற்கு தயங்குவதாக சொல்கிறார்கள். அடுத்த கண்டிஷன் என்னவெனில் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிவதற்குள் கொடுத்து விட வேண்டுமாம் .சில பேர் ஷூட்டிங் சமயத்தில் பாதி பணத்தை வாங்கிக் கொண்டு டப்பிங் முடிந்த பிறகு தான் மீதி பணத்தையும் வாங்குவார்கள்.

ஆனால் அஜித் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிந்ததும் கொடுத்து விட வேண்டும் என கேட்கிறாராம். இந்த கண்டிஷன்களால் தான் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குவதாக தெரிகிறது. இதில் ஆதிக்கும் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை எந்த தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றால் அது அஜித் போன்ற பெரிய நடிகருக்கு தான் அவமானமாக இருக்கும்.

இதை மனதில் வைத்துக் கொண்ட ஆதிக் தனது மாமனார் பிரபுவின் சிவாஜி ப்ரொடக்ஷன் மூலமாக இந்த படத்தை தயாரிக்கலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து சிவாஜி ஃபிலிம்ஸ் அசல் என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்தப் படம் அவர்களுக்கு எதிர்பார்த்த வசூலை பெற்று தரவில்லை .இருந்தாலும் ஆதிக் இதைப்பற்றி தனது மாமனார் வீட்டில் பேசி படத்தை தயாரிக்க அனுமதி வாங்குவார் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.

Next Story