பெரிய நன்றி… முடிச்சிவிட்டாங்கப்பா… விடாமுயற்சிக்கு புல் ஸ்டாப் வைத்த அஜித்குமார்..

by Akhilan |
அஜித்குமார்
X

அஜித்குமார் 

Ajithkumar: நடிகர் அஜித்குமாருக்கு விடாமுயற்சி படக்குழு தற்போது மிகப்பெரிய நன்றி ஒன்றை கூறி இருப்பதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிப்பில் எந்த திரைப்படமும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு இரண்டு படங்களுமே அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வருடமாக அஜித் ரசிகர்கள் கிடைத்த ஏமாற்றத்திற்கு பரிசாக வரும் வருடத்தில் தொடர்ச்சியாக கொண்டாட வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முதலில் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு தொடக்கத்தில் இருந்தே சிக்கல்தான் அதிகமாக வந்து கொண்டிருந்தது. முதலில் படத்தின் பெயரை மட்டுமே அறிவித்தப்பட குழு செல்லாமல் காலதாமதம் ஆனது.

பல மாத இடைவேளைக்கு பின்னர் நடிகர் அஜித் குமார் தன்னுடைய உலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஷூட்டிங் இருக்கு திரும்பினார். இருந்தும் அவர்கள் படப்பிடிப்பை நடத்திய அஜர்பைஜானின் கால சூழ்நிலை தொடர்ச்சியாக சூட்டிங் கேன்சல் ஆகும் நிலையை உருவாக்கியது.

இது மட்டுமல்லாமல் படத்தின் பட்ஜெட் அதிகரித்துக் கொண்டே போக, ஷூட்டிங்கை சற்று நிறுத்திய லைகா நிறுவனம் தன்னுடைய மற்ற திரைப்படங்களின் ரிலீசில் கவனம் செலுத்தியது. இந்த பிரேக்கை பயன்படுத்திக் கொண்ட நடிகர் அஜித்குமார் உடனே ஆதிக் ரவிச்சந்திரன் திரைப்படத்தில் இணைந்தார்.

இடைத்தொடர்ந்து இப்படத்தின் சூட்டிங் ஒரு வழியாக முடிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இப்படத்தின் கடைசி கட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது அஜித் குமார் தன்னுடைய டப்பிங் பணியையும் முடித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், லைக்கா குரூப்பின் தலைவர் சுபாஷ்கரன், லைகா புரோடக்‌ஷன் நிறுவனத்தின் தலைவர் தமிழ் குமரன் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஹைதராபாத்தில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் முடித்ததற்காக நன்றி சொல்லிக் கொண்டதாக புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

Next Story