மீண்டும் ரேஸிங் களத்தில் அஜித்குமார்… வெளியான சூப்பர் அப்டேட்.. ஆனா இது வேற மாதிரி இருக்கே!..

Ajithkumar: தமிழ் சினிமாவின் முக்கிய தூணாக இருக்கும் அஜித்குமார் தற்போது மீண்டும் ரேஸிங் களத்தில் இறங்க இருப்பதாக அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமாருக்கு சினிமா மட்டுமல்ல ரேஸிங்கில்லும் அதிக காதல் கொண்டவர். அடிக்கடி ரேஸிங்கில் இருப்பதை வழக்கமாக வைத்திருப்பார். பல ஆண்டுகளாக அதில் பிரேக் எடுத்துக்கொண்டவர். மீண்டும் ரேஸிங் களத்துக்குள் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.

இதற்காக குட் பேட் அக்லி படத்தை முடித்துக்கொண்டு சில காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் இருந்து, "ஒரு புதிய பரபரப்பான சாகசத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறோம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்: அஜித் குமார் ரேஸிங் என்னும் அணியை தொடங்கி அதில் ஃபேபியன் டஃபியூ அதிகாரப்பூர்வ ரேஸிங் டிரைவராக இருப்பார்.

அது மட்டுமல்லாமல், அஜித் குமார் ஒரு அணியின் உரிமையாளராக இருக்கத் தவிர, மீண்டும் ரேஸிங் சீட்டிற்கு திரும்பியுள்ளார். சர்வதேச மேடை மற்றும் எஃப்ஐஏ போட்டிகளில் போட்டியிடும் மிக சில இந்தியர்களில் அஜித்தும் ஒருவர். அவர் 2004ம் ஆண்டு ஆசிய BMW F3 சாம்பியன்ஷிப், 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டுள்ளார். தற்போது இந்த புதிய ரேஸிங் அணி பல சர்வதேச ரேஸிங் தொடரில் போட்டியிட இருக்கிறது.

அதன் முதற்கட்டமாக 24hseries ஐரோப்பிய தொடரில் @போர்ஷே 992 GT3 கப் பிரிவில் போட்டியிட இருக்கிறது. நம் முக்கிய இலக்குகளில் ஒன்று திறமையான இளம் டிரைவர்களுக்கு முழுமையான ஆதரவு கொண்ட ரேஸிங் திட்டத்தை வழங்குவது தான். இதைப் பற்றிய மேலும் பல தகவல்களை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரேஸிங்கில் ஆர்வம் கொண்ட அஜித் மீண்டும் ஒரு அணியை தொடங்கி அதிலும் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் அவர் இந்த ரேஸிங்கில் தன்னுடைய அணியுடன் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சுரேஷ் சந்திராவின் பதிவுக்கு: https://x.com/SureshChandraa/status/1839727724837081548

Related Articles
Next Story
Share it