பிராட் பிட்டை ஓவர் டேக் செய்த அஜித்!. துபாய் ரேஸ்ல மாஸ் காட்டிட்டாரே!...
Ajithkumar: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். விஜயை போலவே இவருக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் நடிகராக மாறினார். அஜித். அந்த படங்களுக்கு பின்னரே அவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.
அஜித்தின் ஆர்வங்கள்: பைக்கில் உலகை சுற்றுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாகி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என அஜித்துக்கு சினிமாவை தாண்டி பல விஷயங்களின் மீது ஆர்வம் இருக்கிறது. இதன் காரணமாக அஜித் விஜயை போல தொடர்ந்து நடிக்கும் நடிகர் இல்லை.
ஒரு வருடத்திற்கு ஒரு படம் நடிக்கும் நடிகராகவே அவர் இருக்கிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பும் வேகமாக முடிந்து உடனே வெளியாவதும் இல்லை. வலிமை படம் 2 வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்டது. துணிவு படம் வெளியாகி சரியாக 2 வருடங்கள் முடிந்துவிட்டது.
விடாமுயற்சி: இன்னமும் அஜித்தின் அடுத்த படம் வெளியாகவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி போன்ற படங்களில் அஜித் நடித்து முடித்துள்ளார். இதில், விடாமுயற்சி துவங்கப்பட்டு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனாலும், படம் இன்னமும் வெளியாகவில்லை.
அஜித் கார் ரேஸ்: இந்நிலையில்தான், துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள அஜித் சென்றார். அவரின் அணிக்கு அவர்தான் கேப்டன். கடந்த சில நாட்களாக ரேஸ் காரை ஓட்டி பயிற்சி எடுத்தார் அஜித். அப்போது அவரின் கார் விபத்திலும் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் நடக்கவில்லை. நேற்று ரேஸ் துவங்கியது. அஜித் கார் ரேஸில் இருப்பது தெரிந்ததும் துபாயில் உள்ள அஜித்தின் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் வந்து அவரை உற்சாகப்படுத்தி வந்தனர்.
அஜித்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை கண்டு போட்டி வர்ணனையாளரே ஆச்சர்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி கருத்து தெரிவித்த அவர் ‘அஜித்துக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பு ஆச்சர்யமாக இருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவின் டோனோ ரேஸிங் சர்க்யூட்டுக்கு ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் வந்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பை விட அஜித்துக்கு இங்கு அதிக வரவேற்பு இருக்கிறது. அவரது இடத்தில் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக அவர் இருப்பார் என நினைக்கிறேன்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஆனால், சோகம் என்னவெனில் இந்த கார் ரேஸிலிருந்து அஜித் விலகிவிட்டார். அவரின் அணியினர் தொடர்ந்து பங்கேற்கவுள்ளனர். மேலும், அஜித்தின் விடாமுயற்சி படம் ஜனவரி மாதம் 23ம் தேதி ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதேபோல், குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.