ரேஸில் தாறுமாறாக புரண்ட கார்… கெத்து காட்டும் அஜித்.. வெளியான வீடியோ!..

Ajithkumar: ரேஸிங் களத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்குமார் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி இருப்பதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் அஜித்குமார் ஆரம்பகாலத்திலிருந்து ரேஸிங் மீது மிகுந்த ஆர்வம் இருப்பவர். பைக் ரேஸிங் தொடங்கி கார் ரேஸிங் வரை நிறைய முறை அவர் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் வளரும் காலத்தில் அவரால் பெரிய அளவு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அதற்கு பல வருடங்களாக பிரேக் கொடுத்திருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக மாறியிருக்கிறார்.
இதனால் தற்போது மீண்டும் தன்னுடைய ரேஸிங் களத்திற்கு வந்திருக்கிறார். வருடத்திற்கு ஆறு மாதம் திரைப்படமும், மற்ற மாதங்களில் ரேஸிங்கும் இருக்கப் போவதாக அவர் ஏற்கனவே துபாய் ரேஸிங் களத்தில் அறிவித்துவிட்டார்.
தனக்கென ஒரு ரேஸிங் டீமை உருவாக்கி அவர்களுடன் தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வருகிறார். இதில் அடிக்கடி தற்போது அஜித்திற்கு விபத்து நடப்பது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த முறை துபாய் ரேஸிங் களத்தில் கூட அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியானது.
அந்த விபத்தால் அவர் போட்டியில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தும் பல போராட்டங்களை தாண்டி அவருடைய அணி மூன்றாம் இடத்தை தக்க வைத்தது.
இந்நிலையில் அடுத்தடுத்த ரேஸிங் போட்டிகளுக்காக அஜித்குமார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் தற்போது மீண்டும் அவருடைய கார் தலைக்குப்புற கவிழ்ந்த வீடியோ அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பயிற்சியின் போது அவருடைய கார் கவிழ்ந்து திரும்பி நின்ற போதும் அஜித் கெத்தாக இருப்பது வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது. அவருக்கு சல்யூட் டூ தி சீஃப் என்ற கமெண்ட் போட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: https://x.com/SureshChandraa/status/1894279676471718168