Ajith: நான் கெட்டவன்.. அவன் நல்லவனா?.. திருந்துங்க!.. இப்படி பொங்கிட்டாரே அஜித்!...
சினிமாவில் உலகில் சுயநலத்திற்காகவும், தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னை பில்டப் செய்து காட்ட உதவும் என்பதற்காகவும் தனது ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ளும் நடிகர்களே அதிகம். நடிகர்களின் வாழ்க்கையை பற்றியோ, அவர்களின் எதிர்காலம் பற்றிய எந்த கவலையும் படமாட்டார்கள். அவர்களின் சொந்த வாழ்க்கை மீது எந்த அக்கறையும் அவர்களுக்கு இருக்காது. விசில் அடிசான் குஞ்சிகளாக மட்டுமே அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் அப்படி இருந்தால்தான் நமது வண்டி ஓடும் என்றே பெரும்பாலான நடிகர்கள் நினைப்பார்கள்.
எனவே, ரசிகர்கள் செய்வது தவறாக இருந்தாலும் அதை கண்டிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அறிவுரை சொல்லமாட்டார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். ரசிகர்கள் சொந்த காசை செலவழித்து பேனர், கட் அவுட் வைப்பதை ஆதரிப்பார்கள். பல அடி உயர கட் அவுட்டில் ஏறி தங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகனை கண்டிக்காமல் அதைப்பார்த்து சந்தோஷப்படுவார்கள். ஆனால், அஜித் இதற்கு விதிவிலக்கு.
இதையெல்லாம் நீங்கள் எனக்கு செய்ய தேவையில்லை. நான் பணத்திற்காக சினிமாவில் நடிக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். நடிகனின் மீது அன்பு இருந்தால் போதும். படத்தை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நடிகர்களை கடவுள் போல வழிபடாதீர்கள் என அறிவுரை சொன்ன முதல் நடிகர் அஜித் மட்டுமே. அதை விட ‘ விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. என சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் எப்போது வாழ்வீர்கள்?’ என ரசிகர்களை பார்த்து கேள்வி எழுப்பிய முதல் நடிகர் அவர்தான். ஆனாலும் ரசிகர்கள் இன்னமும் திருந்தவில்லை.
சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த அஜித் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து சொன்னபோது ‘இதற்கு ஒருவரை மட்டுமே குறை சொல்ல முடியாது. மக்களும், ரசிகர்களும் தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். உயிரை கொடுத்து அன்பு காட்ட தேவையில்லை. அந்த சம்பவத்திற்கு எல்லோரும்தான் காரணம். ஊடகங்களும் திருந்த வேண்டும்’ என சொல்லியிருக்கிறார்.
மேலும், ஒருமுறை தேர்தலில் ஓட்டு போட நான் சென்றிருந்தபோது என்னை சூழ்ந்துகொண்டனர். அங்கு புகைப்படம் எடுக்கக்கூடது என ஒட்டியிருக்கிறார்கள். ஆனாலும், எல்லோரும் போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள். ஒரு ரசிகர் செல்பி எடுக்கிறார். அவரிடமிருந்து நான் செல்போனை பிடுங்கினேன். அந்த வீடியோ வைரலானது. அவர் நல்லவர் போலவும், என்னை கெட்டவர் போலவும் ஊடகங்கள் சித்தரித்தது. இதுதான் இங்கு நடக்கிறது. சட்டம் இங்கு எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது பொருந்தும்’ என பொங்கியிருக்கிறார் அஜித்.
