
Cinema News
AK64 படத்தின் தலைப்புக்கு வந்த சிக்கல்!… இந்த பஞ்சாயத்து முடியாது போல!…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே இயக்கவிருக்கிறார். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஊடகங்கள் மூலமாக ஆதிக் இதை உறுதி செய்து விட்டார்
. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகிவிட்டது. இந்த படத்தில் அஜித்தின் சம்பளம் 180 கோடி என சொல்லப்படுகிறது.
அஜித் இவ்வளவு சம்பளம் கேட்டதால் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ், லைக்கா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது’ என கை விரித்து விட்டார்கள். எனவே ‘படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமைகளை சம்பளமாக எனக்கு கொடுத்து விடுங்கள்’ என அஜித் சொல்ல தற்போது இந்த படம் டேக் ஆப் ஆகி இருக்கிறது.
அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார். இந்த மாதத்தில் அவர் சென்னை வரவிருக்கிறார். AK64 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ‘குட் பேட் அக்லி ரசிகர்களுக்காக எடுத்தேன். AK64 படத்தை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எடுப்பேன்’ என சொல்லி இருக்கிறார் ஆதிக்.
இந்நிலையில், இந்த படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ஓடிடி நிறுவனங்கள்தான். ஏனெனில் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்தால்தான் ஓடிடியில் கல்லா கட்டும் என்பதால் இப்போது பல படங்களுக்கும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் வைக்கப்படும் தலைப்புகளை ஏற்கனவே கன்னடம், மலையாளம், தெலுங்கு அல்லது ஹிந்தி மொழிகளில் ஏதேனும் ஒரு படத்திற்கு வைத்திருக்கிறார்கள். எனவே அப்படி தலைப்பு வைக்கப்பட்ட தமிழ் படத்தை மற்ற மொழியில் வெளியிடும் போது சிக்கல் உருவாகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது.
தற்போது AK64 படமும் அந்த பிரச்சனையை சந்தித்துள்ளது. இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஆங்கில தலைப்பு ஏற்கனவே ஒரு படத்திற்கு வைக்கப்பட்டிருப்பதால் அதற்கு என்.ஒ.சி வாங்கும் வேலையில் படக்குழு இறங்கி இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.