1. Home
  2. Cinema News

அஜித்துடன் இணையும் அடுத்த இயக்குனர்.. அப்போ ‘ஏகே 65’ செம திரில்லரா இருக்கும் போலயே

ajith
ஏகே 64க்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் பற்றிய  தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 

அஜித்  கார் ரேஸுக்கு பிறகு தற்போது அவரது பொழுது போக்கு அம்சங்களில் பிஸியாக இருந்து வருகிறார். மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிப்பது, கோயில்களுக்கு செல்வது என அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறார். நாள் தோறும் அஜித் சம்பந்தமான செய்திகள் சோசியல் மீடியாக்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. திருப்பூரில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். 

கோவையில் மினி கார் ரேஸில் பயிற்சியில் ஈடுபட்டார். நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதற்கு முன் கேரளாவில் உள்ள பகவதி அம்மனை தரிசனம் செய்தார். ஒரு மனுஷனால ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பேலன்ஸ் செய்து விட முடியுமா என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் அஜித். ஆனால் நான் இந்தளவுக்கு சந்தோஷமாக சுதந்திரமாக இருக்கிறேன் என்றால் அதற்கு முழு காரணம் என் மனைவி ஷாலினிதான் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் அஜித்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்தப் படம் ப்ளாஸ் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்தது. அதனால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்க இருக்கிறார். இந்த வருட இறுதியில் அதற்கான வேலைகள் துவங்க இருக்கிறது. 

இந்த முறை அஜித் ஆதிக் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்று தெரிகிறது. இது ஒரு பக்கம் இருக்க அஜித்தின் அடுத்த படமான 65வது படத்தை இயக்க போகும் இயக்குனர் பற்றிய  தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. எஃப்.ஐ. ஆர் படத்தை இயக்கிய மானுஆனந்த் இயக்கத்தில் தான் அஜித் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இவர் ஏற்கனவே ஆர்யாவை வைத்து மிஸ்டர்.எக்ஸ் என்ற படத்தை இயக்கியவர்.

ajith

ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்த வருட இறுதியில் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஃப்.ஐ. ஆர் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு ஸ்பை திரில்லர் படமாக வெளியானது. அதுவும் ஓடிடியில் வெளியான திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அந்தப் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். 

இந்தப் படத்தின் இயக்குனர்தான் மானு ஆனந்த். சமீபத்தில் அஜித்தை சந்தித்தை ஒரு ஸ்கிரிப்ட் சொல்லியிருப்பதாக தெரிகிறது. அதனால் ஒருவேளை அஜித்தின் அடுத்த படத்தை மானு ஆனந்த் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏகே 65 லிஸ்ட்டில் மகிழ்திருமேனி,சிறுத்தை சிவா, லோகேஷ் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.