பிரபல இயக்குனரை கொக்கி போட்டு தூக்க பிளான் போட்ட ஏகே64 … செமையா இருக்கு!

AK64: அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் டைரக்டர் குறித்த தகவலால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பின்னர் ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படாமலே இருந்தது. இதை தொடர்ந்து பிரேக்கில் இருந்த அஜித் பல மாதங்கள் கழித்து கடந்த வருடத்தின் கடைசியில் தான் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அதிலும் திட்டமிட்டபடி ஷூட்டிங் நடைபெறாமல் போக குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதே நேரத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் 20 வருடத்திற்கு பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு படத்தின் சூட்டிங்கிலும் அஜித் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் இந்த வருட கடைசியிலோ அல்லது அடுத்த ஆண்டு தைப்பொங்கலிலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு படங்களும் முக்கிய வேலைகள் முடிந்து இருக்கும் நிலையில் அஜித்தின் 63வது திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன் அடிப்படையில் அஜித் பிரபல கன்னட நடிகர் பிரசாந்த் நீலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டால் ஏகே64 பிரசாந்த் நீல் இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது ஜூனியர் என்டிஆர் படத்தின் வேலைகளில் பிரசாந்த் நீல் ஈடுபட்டு இருக்கிறார். அடுத்து கேஜிஎப் திரைப்படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு இறுதிக்கு மேல்தான் தொடங்கும் என்பதால், அஜித் படத்தில் அவர் இணையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது,

Related Articles
Next Story
Share it