1. Home
  2. Cinema News

AK64: ரேஸை விட்டு சினிமாவுக்கு வரும் அஜித்!.. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!..

ak64
ak64 அப்டேட் விரையில் வெளியாகும்...

அஜித் 64

நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது தொழில் என்றாலும் கார் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்து கொள்வது ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். அதுபோக ரிமோட் மூலம் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது என அஜித்துக்கு பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு.

திருமணத்துக்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்து கொள்ளவில்லை. தற்போது அவரது மனைவி ஷாலினி பச்சைக் கொடி காட்டிவிட்டதால் மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள துவங்கியிருக்கிறார். முதலில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு அஜித்தின் டீம் மூன்றாவது பரிசை வென்றது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் இப்போது அவரின் டீம் விளையாடி வருகிறது. ஒரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய பட வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு அஜித் 180 கோடி வரை சம்பளம் கேட்டதால் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி என சொல்லப்படுகிறது. அஜித்துக்கு இந்த சம்பளத்தை கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயங்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தை தயாரிப்பது உறுதியானது. அஜித் இந்த மாதம் கார் ரேஸை முடித்துவிட்டு சென்னை வரவிருக்கிறார்.

boss

எனவே அடுத்த மாதம் அதாவது நவம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் கசிந்துள்ளது. ஏனெனில் இந்த படம் பற்றி கடந்த பல மாதங்களாக பல செய்திகள் வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் அது வியாபாரத்துக்கு உதவும் என்பதால் விரைவில் இதுபற்றி அப்டேட் வெளியாகும் என்கிறார்கள்.

இந்த படத்திற்கு பாஸ் (Boss) என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.