2025-ல் எல்லா நடிகர்களின் படங்களும் ரிலீஸ்!.. ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான்!..

by Murugan |
actors
X

actors

2025 Release movies: ஒவ்வொரு மொழிகளிலும் பல நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகர்களுக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 80,90களில் தீபாவளி, பொங்கல் என்றால் எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாகும்.

80களில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், பிரபு, சத்தியராஜ் போன்ற எல்லா நடிகர்களின் படங்களும் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகும். அப்போது தமிழகத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகம். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தது. ஆனால், தற்போது ஆயிரமாக சுருங்கிவிட்டது. இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கலுக்கே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதில்லை.


கடந்த பல வருடங்களாகவே ரஜினி வருடத்திற்கு ஒரு படம் நடித்தார். கமல் இடையில் 4 வருடங்கள் இடைவெளி விட்டு விக்ரம் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். விஜய் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜித்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு படம் வந்தது. இடையில் பைக்கில் உலகை சுற்றப்போய்விட்டார்.

2025 ஜனவரி முதல் அக்டோபர் வரை அவர் துபாயில் நடக்கும் பைக் ரேஸில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆனாலும் அவரின் 2 படங்கள் 2025ம் வருடம் வெளியாகவுள்ளது. விஜய் ஒரு படம் முடிந்தவுடன் உடனே அடுத்த படத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது அவர் அரசியலுக்கு சென்றுவிட்டதால் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படமே கடைசிப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி 2 வருடங்களான பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம் கங்குவா. இடையில் 2 படங்கள் ஓடிடியில் நேரிடையாக வெளியானது. ஆனால், கங்குவா படம் அவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. அதேபோல், தொடர்ந்து நடித்து வரும் நடிகராக தனுஷும் இருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் சில பெரிய நடிகர்களின் படங்கள் வராமல் இருக்கும். ஆனால், வருகிற 2025ம் வருடம் எல்லா நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளது. ரஜினிக்கு கூலி, கமலுக்கு தக் லைப், அஜித்துக்கு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, விஜய்க்கு ஹெச்.வினோத் படம், சூர்யாவுக்கு ரெட்ரோ, கார்த்திக்கு சர்தார் 2 மற்றும் வா வாத்தியாரே, விக்ரமுக்கு வீர தீர சூரன், அருண் விஜய்க்கு வணங்கான், தனுஷுக்கு குபேரா மற்றும் இட்லி கடை, சிவகார்த்திகேயனுக்கு முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா இயக்கும் படங்கள், விஜய் சேதுபதிக்கு ட்ரெய்ன் மற்றும் ஏஸ் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.


இதில், சிம்புவுக்கும் அவர் தனி ஹீரோவாக நடிக்கும் படம் இல்லை. ஆனால், கமலுடன் இணைந்து அவர் நடித்துள்ள தக் லைப் படம் 2025,ம் வருடம் வெளியாகவுள்ளது. இதுபோக மற்ற நடிகர்களின் படங்கள் மற்றும் சில அறிமுக நடிகர்களின் படங்களும் 2025ம் வருடம் வெளியாகவுள்ளது.

Next Story