ஆரம்பமே பட்டாசா இருக்கே!.. ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் விடாமுயற்சி.. சம்பவம் லோடிங்..!

by Ramya |   ( Updated:2025-02-02 15:25:48  )
vidamuyarchi
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சினிமா மீது எந்த அளவுக்கு காதல் இருக்கின்றதோ, அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் அஜித்.

தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகின்றார். இதற்காக கடந்த வருடம் டிசம்பர் மாதமே தான் கமிட் செய்திருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்று இருக்கின்றார். இந்த வருடத்தில் 9 மாதம் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக நடிகர் அஜித் கூறியிருக்கின்றார்.


விடாமுயற்சி திரைப்படம்: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2 வருடங்களாக எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் எடுத்து முடிப்பதற்கு காலதாமதம் ஆகிவிட்டது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் படம் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகாது என்கின்ற அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

விடாமுயற்சி ரிலீஸ்: பல பிரச்சினைகளை கடந்து விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டு வருடம் கழித்து நடிகர் அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர், பாடல், டிரைலர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருப்பதால் படக்குழுவினர் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் இயக்குனர் மகிழ் திருமேனி பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.


விடாமுயற்சி ப்ரீ புக்கிங்: சமீபத்திய பேட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி திரைப்படம் பண்டிகை தினத்தில் வெளியாகவில்லை என்றால் என்ன விடாமுயற்சி வெளியாகும் தினம் தான் பண்டிகை நாள் என்று அஜித் கூறியதாக தெரிவித்திருந்தார். நடிகர் அஜித் சொன்னது போலவே விடாமுயற்சி திரைப்படத்தின் திருவிழா ஆரம்பித்து இருக்கின்றது.

படம் ரிலீஸ் ஆவதற்கு 4 நாட்கள் இருப்பதால் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி இருக்கின்றது. புக்கிங் தொடங்கி சில மணி நேரத்திலேயே பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. இதனால் இப்படம் முன்பதிவிலேயே ரூபாய் 25 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story