புரமோஷனுக்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா!.. மாஸ் காட்டப்போகும் புஷ்பா 2....
Pushpa2: தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவது என்பது விஜயசாந்தி காலத்தில் இருந்தே இருக்கிறது. 35 வருடங்களுக்கு முன்பே வைஜெயந்தி ஐபிஎஸ் படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதேபோல், டாக்டர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான இதுதான்டா போலீஸ் படமும் அப்படி வசூலை அள்ளியது.
அதைவிட சிரஞ்சீவியின் எல்லா படங்களுமே தமிழில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. விஜயசாந்தி, ராஜசேகர், நாகார்ஜுனா, வெங்கடேஷ், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்களின் படங்கள் தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி வந்தது. அதற்கு ஒரு ரசிகர் கூட்டமும் இருந்தது.
இடையில் சில வருடங்கள் தெலுங்கு படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு இல்லாமல் இருந்தது. அப்போதுதான் ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி 2 படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப், காந்தாரா, கேஜிஎப் 2 ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை பேன் இண்டியா படங்கள் என சொல்ல துவங்கினார்கள்.
அதேபோல், செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தெலுங்கு படமான புஷ்பா படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் இதில் நடித்து வருகிறார்கள். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் உருவானபோது அல்லு அர்ஜூனுக்கும் இயக்குனருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால், ரிலீஸ் தேதி 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இறுதியாக டிசம்பர் 6ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. தற்போது அது 5ம் தேதியாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷனுக்காகவே 2 மாதங்களை ஒதுக்கி இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். இதற்காக 100 கோடி செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ரிலீஸுக்கு முன்பே தியேட்டர் உரிமை, சேட்டிலைட், ஓடிடி, இசை உரிமை என எல்லாம் சேர்த்து 1000 கோடி வசூலை இப்படம் தொட்டுவிட்டது. இன்னமும் தியேட்டர் மூலம் கிடைக்கும் பெரிய வசூல் இருக்கிறது. எப்படி பார்த்தாலும் 1500 கோடி வசூலை புஷ்பா 2 தொட்டுவிடும் என்றே கணிக்கப்படுகிறது.