1. Home
  2. Cinema News

வெற்றிக்காக மனைவியையே எதிர்த்த தனுஷ்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?

vetrimaran
சிம்பு தனுஷ் பிரச்சினையில் இது வேறயா? இன்னும் என்னெல்லாம் கட்டுக்கதைய கட்டுவாங்களோ

தமிழ் சினிமாவில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல ஒரு நட்பு இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். தற்போது சிம்புவை வைத்து வெற்றிமாறன் அரசன் என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் தான் வெளியானது. ஆனால் இந்தப் படம் முதலில் தனுஷ் நடிக்க இருந்ததாகவும் தனுசுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையே சில முரண்பாடுகள் இருந்ததனால் இந்த படத்தில் இருந்து தனுஷ் விலகி விட்டார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு வீடியோவில் விளக்கமாக பேசியிருக்கிறார். அரசன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் சிறையில் இருக்கும் பொழுது வெளியில் நடக்கும் கதையாக இந்த அரசன் திரைப்படத்தை வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இதைப்பற்றி தனுஷிடமே வெற்றிமாறன் கூறி அவரிடம் என்.ஓ.சியையும் வாங்கி விட்டார்.

மேலும் வாடிவாசல் படத்திற்கு முன்பு, தான் ஒரு படத்தை சீக்கிரமாக எடுக்க வேண்டும் ,பொருளாதார ரீதியாக அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் .அதனால் நீங்கள் என் ஒ சி கொடுக்க வேண்டும் என்று கேட்டு வாங்கி இருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு தனுஷும் அவருடைய மேனேஜரிடம் வெற்றிமாறன் என்ன கேட்டாலும் தாமதம் செய்யாமல் கொடுக்கும்படியும் கூறி இருப்பதாக பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தை பொறுத்த வரைக்கும் தனுஷின் முழு ஆதரவு வெற்றிக்கு இருக்கிறது. என்ன காரணம் என்றால் வெற்றி மீது தனுஷுக்கு இருக்கும் மரியாதை. வெற்றிமாறனின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பண உதவி செய்திருக்கிறார் தனுஷ். இதில் கூடுதலாக ஒரு தகவலை சொல்ல வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு மனைவியாக இருக்கும் பொழுது தனுஷ் வெற்றிமாறனுக்கு பணம் கொடுப்பது ஏதோ ஒரு சந்தர்ப்ப நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தெரிய வர அவர் தனுஷை கேள்வி கேட்டிருக்கிறார்.

எதுக்கு பணம் கொடுக்குறீங்க? எந்த கணக்கில் கொடுக்குறீங்க? என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறாராம். ஆனால் தனுஷ் ஐஸ்வர்யாவின் வாயை அடைத்து விடுவாராம். இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. இது எனக்கும் வெற்றிமாறனுக்கும் இடையில் இருக்கும் விஷயம் என்று கூறிவிடுவாராம். அந்த அளவுக்கு வெற்றிமாறன் மீது தனுஷுக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என பிஸ்மி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

கட்டுரையாளர்கள்