வசூலில் தெறிக்க விடும் அமரன்... 2வது நாள் கலெக்ஷனைப் பாருங்க...
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் உலகெங்கும் சக்கை போடு போட்டு வருகிறது. படத்தைப் பார்த்து விட்டு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கமலையும் படக்குழுவையும் பாராட்டியுள்ளனர்.
படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். சாய்பல்லவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ் ஆக நடித்துள்ளார். இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் உண்மைக்கதை என்பதால் ரசிகர்கள் அதனுடன் ஒன்றி விடுகிறார்கள்.
கிளைமாக்ஸில் அழ வைத்து விடுகிறதாம் படம். படத்திற்கு இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ள படம் சிவகார்த்திகேயன் கேரியரில் பெரிய மைல் கல் என்றே சொல்லலாம். இதன்பிறகு அவரது மார்க்கெட் எகிறி விடும் என்பது நிச்சயம்.
தீபாவளி அன்று வெளியான படங்களில் முதலிடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் ராணுவ வீரர்கள் படும் கஷ்டங்களையும், அவர்கள் செய்யும் யுத்தத்தையும் வெகு யதார்த்தமாகப் படமாக்கி இருப்பதால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து பல்வேறு தரப்பினரும், விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழன் பெருமைப்படக்கூடிய உயரிய கலைப்படைப்பு என்று தயாரிப்பாளர் எஸ்.தாணு பாராட்டியுள்ளார். மேலும் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி செதுக்கியுள்ளார். உயரிய நடிப்பை தம்பி சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார்.
மனதை விட்டு அகலாமல் இருக்கிறார். சாய்பல்லவி. நெஞ்சை நெகிழச் செய்யும் இசையை ஜி.வி.பிரகாஷ் கொடுத்துள்ளார். தரம், தகுதி, நிர்யணம், தயாரிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தமிழன் பெருமைக் கொள்ளக்கூடிய உயரிய கலைப்படைப்பைத் தந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமரன் முதல்நாளில் உலகளவில் 42.3 கோடியை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் 150 கோடி.அமரன் முதல் நாளில் 21.4 கோடியும், 2வது நாளில் 19.25 கோடியும் வசூல் ஆகி உள்ளது. இவற்றில் 2வது நாளின் வசூல் விவரம் முன்கூட்டியே எடுக்கப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை முதல் நாளில் 16 கோடியும், 2வது நாளில் 16.50 கோடியும் வசூலித்துள்ளது. 4வது நாளில் 100 கோடியை எட்டும் என்றும் சொல்லப்படுகிறது.