Amaran: இந்துவுக்கு மட்டும் 'சிலுவை' தெரியுது... முகுந்துக்கு ஏன் மறைச்சீங்க..? நச்சுனு பதில் சொன்ன இயக்குனர்..!

by ramya |
Amaran: இந்துவுக்கு மட்டும் சிலுவை தெரியுது... முகுந்துக்கு ஏன் மறைச்சீங்க..? நச்சுனு பதில் சொன்ன இயக்குனர்..!
X

rajkumar

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அவரின் ராணுவ வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் இதுதான் என்று தெரிந்தால் கூட சாய்பல்லவி தனது நடிப்பால் படத்தையே தாங்கி பிடித்திருக்கின்றார்.

அவரை தவிர வேறு ஒருவர் இப்படத்தில் நடித்திருந்தால் கட்டாயம் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா? என்பது தெரியாது என்று விமர்சகர்கள் பலரும் கூறிவந்தார்கள். படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது. குறைவான நாளில் 100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து படம் புதிய சாதனையை படைத்திருக்கின்றது.




சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் அவர்களின் சினிமா கெரியரில் இந்த திரைப்படம் ஒரு முக்கிய படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த திரைப்படம் வெளியான சில தினங்களில் ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது மேஜர் முகுந்த் வரதராஜன் பிராமணர் வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவர் ஒரு பிராமணர் என்பதை எந்த இடத்திலும் அடையாளப்படுத்தப்படவில்லை.

ஆனால் நடிகை சாய் பல்லவி மட்டும் கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை கழுத்தில் சிலுவையுடன் காட்டி அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ஏன் இப்படி மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதற்கு படக்குழுவினர் யாரும் பதில் அளிக்காமல் இருந்து வந்தார்கள்.

நேற்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது அதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பதில் அளித்து இருக்கின்றார். இதுகுறித்து அவர், ' முகுந்தின் குடும்பத்தினர் அவர் ஒரு இந்தியன். தமிழன் என்று மட்டும் காட்சிகள் வைத்தால் போதும். முகுந்த் எப்போதும் இந்தியன்னு மட்டும் தான் அடையாளப்படுத்திக்க விரும்புவான் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் தான் அவரின் அடையாளங்களை படத்தில் காட்டவில்லை,'' என்றார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story