‘அமரன்’ படத்துல இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்! நைனானு கூப்பிட இதுதான் காரணமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பயோபிக் என்பதையும் தாண்டி பிசினஸுக்காக செய்த சில விஷயங்களும் படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கின்றன. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கதைப்படி முகுந்த் வீரமரணம் அடைவார் என்பது அனைவருக்கும் முன்பே தெரியும். ஆனால் அந்த சூழ்நிலைக்குள் ரசிகர்களை எப்படி இயக்குனர் கொண்டு செல்லப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதை மிக அற்புதமாக கொண்டு செலுத்தியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. குறிப்பாக சாய்பல்லவியின் நடிப்புதான் அனைவரையும் ஈர்த்தது.
தன் கணவரான முகுந்த் தனக்கு என்ன நடந்தாலும் அழக் கூடாது என கேட்டு கொண்டதன் பேரில் அழவும் முடியாமல் துயரத்தை தாங்கிக் கொள்ளவும் முடியாமல் சாய்பல்லவியின் நடிப்பு நினைத்தாலே இப்போது வரை புல்லரிக்க வைக்கிறது. இந்த நிலையில் அமரன் படத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சினை குறித்து பிரபல விமர்சகர் ராஜவேல் நாஜராஜன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதாவது படத்தில் எல்லா விஷயங்களும் நன்றாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் உண்மையில் முகுந்த் ஒரு பிராமணர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அதை படத்தில் எந்த இடத்திலேயும் இயக்குனர் காட்டவில்லை. அதற்கு மாறாக எந்த சம்பந்தமும் இல்லாமல் அப்பாவை நைனா என கூப்பிட வைத்திருக்கிறார். இதில் இயக்குனருக்கு என்ன மாதிரியான அழுத்தம் கொடுக்கப்பட்டது என தெரியவில்லை என ராஜவேல் நாகராஜன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் படங்களில் ஒரு பிராமணரை ஹீரோவாக காட்ட பயப்படுகிறார்கள். அது ஏன் என இதுவரை தெரியவில்லை. நைனா என கூப்பிடுவதன் மூலம் அவர்கள் ஒரு தெலுங்கு பேசுகிற சமூகத்தை குறிப்பதாக காட்டப்படுகிறது. ஒரு வேளை தெலுங்கிலும் படத்தை பெரிய அளவில் கொண்டு போவதற்கு இதை ஒரு வழியாக பயன்படுத்தியிருக்கலாமோ என்றும் யோசிக்க வைக்கிறது.
மலையாளத்தில் வரவேற்பை பெற சாய்பல்லவி படத்தில் இருக்கிறார். தமிழுக்கு சிவகார்த்திகேயன். ஹிந்தியில் ராகுல் போஸ் இருக்கிறார். அதனால் தெலுங்கில் பிசினஸை பெறுவதற்காக நைனா என்பதை பயன்படுத்தியிருக்கிறார்களோ என்று தெரியவில்லை என ராஜவேல் நாகராஜன் கூறினார்.