எஸ்.கே. ஹிஸ்ட்ரியில் இதுவே ஃபர்ஸ்ட்!. ஃப்ரி புக்கிங்கில் வசூலை அள்ளிய அமரன்!...

by Murugan |
amaran
X

amaran

Amaran movie: கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் அமரன். 2017ம் வருடம் வெளியான ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அதாவது 7 வருடங்களுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் இது.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு பட்டு மரணமடைந்த முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. காஷ்மீரில் உள்ள ஒரு முக்கிய நகரத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் இருப்பது தெரிந்து முகுந்த் வரதராஜன் தனது படைகளுடன் அங்கே போனார்.

சரியான திட்டமிடலோடு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினார். உயிருக்கு அஞ்சாமல் நெருங்கி சென்று தீவிரவாதிகளை சுட்டு கொன்றார். அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் சில குண்டுகள் முகுந்த் வரதராஜன் மீது பட அங்கேயே அவர் மரணமடைந்தார். முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டது, அவரின் திருமண வாழ்க்கை, ராணுவத்தில் பணிபுரியும் அவர் சிறப்பாக செயல்பட்ட விதம் என எல்லாவற்றையும் இப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமரன் படத்தை முகுந்த் வரதராஜனின் ராணுவ மேலதிகாரிகளுக்கு போட்டு காட்டினார்கள். படத்தை பார்த்த அவர்கள் படம் சிறப்பாக இருப்பதாகவும், இந்த படம் ராணுவ அதிகாரிகளுக்கு செய்யப்படும் மரியாதை என அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அமரன் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

எனவே, படத்தின் புரமோஷன் வேலைகளை படக்குழு செய்து வருகிறது. பல இடங்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், வெளிநாடுகளில் அமரன் படம் ஃப்ரீ புக்கிங்கில் பெரிய சாதனையை செய்திருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் இதுவரை 70 லட்சத்திற்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக ஓப்பனிங் கிடைத்த படமாக அமரன் மாறியிருக்கிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Next Story