கோட் வசூலை தாண்டியதா அமரன்?.. உண்மை நிலவரம் இதுதான்!...

by Murugan |   ( Updated:2024-12-16 16:00:35  )
amaran
X

amaran

Amaran Goat: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம்தான் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சினிமா கற்றவர். 2017ம் வருடம் வெளியான ரங்கூன் படத்தை இயக்கியவர் இவர். 7 வருடங்கள் கழித்து அமரன் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதி தாக்குதலில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைந்திருந்தார் ராஜ்குமார். சிவகார்த்திகேயனும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.


முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார். ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது படம் வெளியாகி 3 வாரங்களில் 300 கோடியை இப்படம் வசூல் செய்திருந்தது.

சூர்யாவின் கங்குவா படம் வெளியானபோதும் அமரன் படம் பல தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டிருந்தது. கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வ அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டியது. இந்நிலையில், இந்த படம் விஜயின் கோட் பட வசூலை தாண்டியதாக சிலர் செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள்.


ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது. விஜயின் கோட் படம் 400 கோடி வசூலை தாண்டியது. அமரன் படம் 300 கோடியையை தாண்டியிருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தில் அமரன் கோட் படத்தை தாண்டியிருக்கிறது. எப்படியெனில், தமிழகத்தில் கோட் படத்தை ஒரு கோடியே 3 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அமரன் படத்தை ஒரு கோடியே 16 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். 13 லட்சம் பேர் அதிகம் என்றாலும் அமரன் படம் கோட் படத்தின் வசூலை தாண்டவில்லை.

எப்படியெனில் கோட் படம் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. மேலும், முதல் 2 நாட்கள் பல தியேட்டர்களிலும் டிக்கெட் மிகவும் அதிக விலைக்கு விற்கப்பட்டது. அதோடு, 2 வாரங்களில் தியேட்டர்கள் குறைந்தது. விஜய் படம் என்பதால் முதல் 2 வாரத்திலேயே வசூலை அள்ளிவிட்டார்கள். ஆனால், அமரன் படம் சாதாரண தியேட்டரில், வழக்கமான டிக்கெட் விலைக்கு விற்கப்பட்டது. 450 தியேட்டர்களில் வெளியான அமரன் 3 வாரங்கள் கழித்தும் சுமார் 250 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் 300 கோடி வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story