Amaran: துப்பாக்கி கொடுத்தது தப்பா போச்சி!. தளபதியை தாண்டிய எஸ்.கே!... இனிமேதான் இருக்கு ஆட்டமே!..
Amaran: சினிமாவில் ஒரு நடிகருக்கான இடம் என்பது நிரந்தரமில்லை. சில நடிகர்கள் மட்டுமே தங்களுக்கான இடத்தைபல வருடங்கள் தக்க வைத்திருப்பார்கள். ரஜினியெல்லாம் இப்போதும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கிறார் எனில் தன்னுடையை இடத்தை தக்க வைக்கும் முயற்சிதான்.
கமலின் கிராப் பங்கு சந்தை போல மாறி மாறி போகும். அதாள பாதாளத்தில் இருந்த அவரின் மார்க்கெட் விக்ரம் ஹிட்டுக்கு பின் சர்ரென மேலே ஏறியது. கல்கி எனும் படத்தில் நடிப்பதற்கு 150 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் கமல். முதல் பாகம் வெளியாகிவிட்ட நிலையில், விரைவில் கல்கி 2 உருவாகவுள்ளது.
தமிழை பொறுத்தவரை விஜயின் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லியோ படம் கூட எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறைவு இல்லை. விஜயின் படங்கள் குறைந்த பட்சம் 400 கோடி வசூலை தாண்டிவிடுகிறது. அதனால்தான் அவருக்கு சம்பளமாக 200 கோடியை கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், அவரோ சினிமா போதும்.. அரசியலுக்கு போகிறேன் என சொல்லிவிட்டு போய்விட்டார். ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படமே அவரின் கடைசிப்படம் என சொல்லிவிட்டார். எனவே, ‘விஜய் இடத்தை யார் பிடிக்கப்போகிறார்?’ என்கிற எதிர்ப்பார்ப்பும் எல்லோரிடமும் இருக்கிறது. அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. அதோடு, கோட் படத்தின் இறுதிக்காட்சியில் சிவகார்த்திகேயனிடம் விஜய் தனது துப்பாக்கியை கொடுத்துவிட்டு செல்வது போல வைக்கப்பட்ட காட்சியும் குறியீடாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான், அமரன் திரைப்படம் 6 நாட்களில் 170 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் 110 கோடியை அள்ளியிருக்கிறது. அதோடு, ஆந்திராவில் கோட் படம் பெற்ற மொத்த வசூலை அமரன் படம் 4 நாட்களில் தாண்டிவிட்டதாம். விஜயை பிடிக்காதவர்கள் இந்த தகவலை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து நக்கலடித்து வருகிறார்கள்.
அதேநேரம், சாய்பல்லவிக்கு தெலுங்கில் ஒரு மார்க்கெட் உண்டு. அமரன் படம் அங்கு நல்ல வசூலை பெற அதுவே முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.