இப்படி பொசுக்குனு போட்டு உடைச்சிட்டாரே.. நான் சிக்ஸ் பேக் வச்சேனா? வைரலான எஸ்கே புகைப்படத்தின் பின்னணி… .
Sivakarthikeyan: அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்திருப்பது போல ஒரு புகைப்படம் இணையதளத்தில் கசிந்தது. இது குறித்து யாரும் நினைக்காத வகையில் அவர் உண்மை பின்னணியை தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் அசுர வளர்ச்சியை பெற்று இருக்கிறார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை குறித்தது. வசூலிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாக்கியது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்தார். இந்த போட்டியில் ஜெயம் ரவி மற்றும் கவின் இடம் பிடித்திருந்தனர்.
இருந்தும் அவர்கள் நெருங்க முடியாத வகையில் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை குறித்து இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்திருக்கிறது.
வசூலில் இந்த குறையும் இல்லாமல் மிகப் பெரிய வெற்றியை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனிடம் ஒரு பேட்டியில் தலையில் தொப்பி சிக்ஸ் பேக்ஸ் வைத்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்ததே அதை எப்படி செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எஸ் கே, எனக்கே அதை பார்க்க பயமா போச்சு. நான் எப்போ வச்சேன். நானும் அந்த புகைப்படத்தை பார்த்தேன். சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் நான் வைக்கவில்லை. என்னிடம ஃபிளாட் அப்ஸ் மட்டுமே என்னிடம் இருந்தது. மசில் ஏத்தினேன்.
அயலான் இயக்குனர் கூற எனக்கு கால் செய்து சிக்ஸ் பேக்ஸ் பயங்கரமா இருக்கே எனக் கேள்வி எழுப்பினார். அதெல்லாம் பொய்யிங்க எனக் கூற என்கிட்டே மறைக்கிறீங்க பாத்தீங்களா? எனக் கலாய்த்துவிட்டு போனை வைத்து விட்டார். ஆனால் நான் எந்த சிக்ஸ் பேக்ஸும் வைக்கவில்லை என வைரலான புகைப்படம் குறித்து உண்மையை சொல்லி இருக்கிறார்.