ஒரு படத்துக்கு ஓவர் சீனா? அமரனிடமும் தோற்ற விடாமுயற்சி… இதுவும் போச்சா?

Vidaamuyarchi: விடாமுயற்சி திரைப்படத்தின் உலகளாவிய வசூல் வெளியாகி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் வசூலை தாண்டவில்லை என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
லைகா நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் தங்களிடம் உரிமத்துக்கான உரிமை வாங்கவில்லை எனக் கூறப்பட்டது.
பெரிய அளவில் தொகை கேட்கப்பட ஏற்கனவே லைகா நிறுவனம் நஷ்டத்தில் இருந்ததால் உரிமத்துக்கு பதில் லாபத்தில் ஷேர் கொடுக்கப்படுவதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து எல்லா பிரச்னைகளையும் சரி செய்து திரைப்படம் பிப்ரவரி 6ந் தேதி உலகளாவில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் படத்தின் ரிலீஸுக்கு முன்னரே பெரிய அளவில் எதிர்பார்க்காதீங்க. படத்தில் மாஸ் எண்ட்ரி இருக்காது. பெரிய காட்சிகள் இருக்காது என்றும் இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துவிட்டார். இதை தொடர்ந்து படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் பிடித்து இருந்தாலும் குடும்ப ரசிகர்களை கவரவில்லை.
தமிழகத்தில் வசூல் சொதப்பியது. அதுபோல உலகளாவிய ரசிகர்களுக்கும் விடாமுயற்சி தோல்வியை நெருங்கி இருக்கிறது. இரண்டாம் நாளே பல இடங்களில் மண்ணை கவ்வி இருக்கிறது. அந்த வகையில் முதல் நாள் உலகளாவிய வசூல் 42 கோடி எனக் கூறப்படுகிறது.
ஆனால் தீபாவளி தினத்தில் வெளியான அமரன் திரைப்படம் உலகளாவில் 45 கோடி வசூல் குவித்தது. விடாமுயற்சி தனிப்படம் என்றாலும் அமரன் திரைப்படம் பிரதர் மற்றும் லக்கி பாஸ்கர் என இரண்டு திரைப்படங்களுடன் மோதியது. இந்த போட்டியில் வென்ற அமரன் படத்தின் வசூலை கூட விடாமுயற்சியால் நெருங்க முடியவில்லை.