காருக்குள்ள கதவை சாத்தினதும் லிப் கிஸ் அடித்த அமீர்கான்!.. 60 வயதிலும் 3வது காதலி கிடைச்சா சும்மாவா?

மும்பையில் நடிகர் அமீர்கான் விமான நிலையத்தில் தனது 3வது காதலியான கெளரி ஸ்ப்ராட் உடன் காரில் ஏறிய காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், கார் கதவை சாத்தியதும் காதலிக்கு லிப் கிஸ் கொடுத்த காட்சிகளும் கசிந்துள்ளன.
இஸ்லாமியாரான அமீர்கான் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்தி சினிமா ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே கான் நடிகர்கள் மீதுதான் அளவுகடந்த அன்பு இருந்து வந்தது. சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர்கான் தான் பாலிவுட் இண்டஸ்ட்ரியையே ஆட்சி செய்து வருகின்றனர்.
சமீப காலமாகத்தான் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், விக்கி கெளஷல் உள்ளிட்டோர் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்து வருகின்றனர். அக்ஷய் குமார், அஜய்தேவ்கன் பல ஆண்டுகளாக போராடியும் கான் நடிகர்களை அவர்களால் நெருங்க கூட முடியவில்லை.
மூன்று கான் நடிகர்களில் சல்மான் கானுக்கு இதுவரை ஒருமுறை கூட திருமணமே ஆகவில்லை. ஆனால், பாலிவுட்டில் பல நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். பல டாப் ஹீரோயின்கள் சல்மான் கானை காதலித்தும் உள்ளனர். ஆனால், யாரும் அவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
ஷாருக்கான் இந்து பெண்ணான கெளரி என்பவரை திருமணம் செய்துக் கொண்டு 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என வாழ்ந்து வருகிறார்.
அமீர்கான் ரீனா தத்தா எனும் இந்து பெண்ணை மணந்தார். 13 ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். லகான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரண் ராவை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர் 13 ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்து பிரிந்தார்.
தற்போது 3வதாக மீண்டுமொரு இந்து பெண்ணான கெளரி ஸ்ப்ராட் என்பவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். மும்பை விமான நிலையத்தில் இருவரும் ஒன்றாக வந்து இறங்கியதும் காருக்குள் ஏறிச் செல்லும் போதே தனது காதலிக்கு உதட்டில் அமீர்கான் முத்தம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.