Categories: Cinema News

தமிழ் நடிகையை கேவலப்படுத்திய பாலிவுட்!. – மானத்தை காப்பாற்றிய ஹீரோ… இப்படியெல்லாம் நடந்துச்சா?..

தற்சமயம் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான சினிமாவாக தென்னிந்திய சினிமாத்துறை உள்ளது. அதிக வசூல் கொடுக்கும் படங்களை தென்னிந்திய சினிமாவிலேயே அதிகமாக பார்க்க முடிகிறது. போன வருடம் வெளியான கே.ஜி.எஃப் 2, ஆர்.ஆர்.ஆர் மாதிரியான மாஸ் ஹிட்களை பாலிவுட் சினிமா கூட தந்ததில்லை.

ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் இந்தியாவில் முக்கியமான சினிமாவாக பாலிவுட் சினிமாவே இருந்தது. இதனால் அப்போதெல்லாம் தமிழ் நடிகர்கள் பாலிவுட்டில் போய் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதுண்டு.

இந்த சமயத்தில் நடிகை ஷோபனா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமாகி வந்தார். 1997 இல் பாலிவுட்டில் ஒரு ஆல்பம் பாடல் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த பாடலை அமிதாப் பச்சனை வைத்து எடுக்க முடிவானது. அதில் அவருக்கு ஜோடியாக ஷோபனா தேர்வானார்.

அப்போது பாலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைப்பதே அரிது என்பதால் ஷோபனாவும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பாலிவுட் படக்குழுவினர் தென்னிந்திய கலைஞர்களை சற்று மரியாதை குறைவாக நடத்துவார்கள் என்பது ஷோபனாவிற்கு தெரியாது.

பாலிவுட்டில் நடந்த கொடுமை:

படப்பிடிப்பு தளத்திற்கு அவர் சென்றபோது அவருக்கென்று தனி கேரவன் வண்டி இல்லை. அமிதாப் பச்சனுக்கு மட்டுமே வைத்திருந்தனர். வெளியிலேயே காத்திருந்தார் ஷோபனா. அவரை அழைத்த குழுவினர் அவரிடம் ஒரு புடவையை கொடுத்து இதை கட்டிக்கொண்டு ரெடி ஆகிக்கோங்க என கூறியுள்ளார்.

அந்த இடம் முழுக்க திறந்த வெளியாக உள்ளது. உடை மாற்ற என அறை எதுவும் இல்லை. இதனால் ஷோபனாவிற்கு தர்மசங்கடமாக இருந்துள்ளது. அப்போது அங்கு நின்ற உதவியாள் ஒருவர் அவங்க எப்படி புடவை மாத்துவாங்க இங்க ஏதும் அறை இல்லையே என கேட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்த நிர்வாகி மலையாள நடிகைதான ஏதாச்சும் மரத்துக்கு பின்னாடி போய் மாத்திட்டு வர சொல்லு என கூறியுள்ளார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அமிதாப் பச்சன் வேகமாக வந்து நீங்கள் என் கேரவனுக்கு சென்று உடையை மாற்றி கொள்ளுங்கள் என கூறி தக்க சமயத்தில் உதவியுள்ளார். ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார் ஷோபனா.

இதையும் படிங்க: சினிமாவை தவறா பயன்படுத்துறாங்க- நயன்தாராவை லெஃப்ட் ரைட் வாங்கிய பத்திரிக்கையாளர்…

Rajkumar
Published by
Rajkumar