மீண்டும் கர்ப்பம்!.. ஆடை இல்லாமல் போட்டோ போட்ட எமி ஜாக்சன்!.. சும்மா அள்ளுது!...

by Murugan |   ( Updated:2025-01-23 08:53:22  )
மீண்டும் கர்ப்பம்!.. ஆடை இல்லாமல் போட்டோ போட்ட எமி ஜாக்சன்!.. சும்மா அள்ளுது!...
X

Amy Jackson: இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் மதராசப்பட்டிணம் படத்தை எடுத்தபோது அந்த படத்தில் நடிக்க லண்டனை சேர்ந்த ஒரு அழகான பெண் தேவைப்பட்டார். அதற்கு எமி ஜாக்சன் பொருத்தமாக இருந்தார். எனவே, இந்த படத்தின் மூலம் அறிமுகமானார்.


முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். டைட்டானிக் படத்தின் பாதிப்பில் ஏ.எல்.விஜய் இந்த படத்தை இயக்கியிருந்ததால் இந்த படத்தின் இறுதிக்காட்சியும் ரசிகர்களின் மனதை உலுக்கியது. படமும் வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றது.

அதன்பின் எமி ஜாக்சன் பல படங்களிலும் நடித்தார். விஜயுடன் தெறி, விக்ரமுடன் ஐ, தனுஷுடன் தங்க மகன், அருண் விஜயுடன் மிஷன் சேப்டர் ஒன், ரஜினியுடன் 2.0 என பல படங்களில் இவரின் அழகை ரசிகர்கள் ரசித்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தைக்கும் அம்மாவானார். மகனுடன் நேரம் செலவழிக்கும் பல புகைப்படங்களையும் எமி தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது எமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். கடற்கரையில் ஆடை ஏதுமின்றி பிகினி மட்டும் அணிந்து போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


இதைப்பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே மகன் இருக்கும் நிலையில் அடுத்து மகள் பிறக்கட்டும் என பலரும் அவருக்கு ஆசிர்வாதம் செய்து வருகிறார்கள். எமி ஜாக்சனின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story