1. Home
  2. Cinema News

அஜித் சொன்னா ரசிக்குறீங்க! ஆனா நான் சொன்னா? வேதனையில் ஆனந்த்ராஜ்

ajith

சினிமாவில் ஒரு காலத்தில் அனைவரையும் மிரட்டும் வில்லனாக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஆனால் இப்பொழுது அவர் காமெடி வில்லனாகவும் காமெடி பண்ணும் நடிகராகவும் மாறியிருக்கிறார். இருந்தாலும் ரசிகர்கள் அதையும் ரசிக்க தொடங்கினார்கள். ஆனால் இது ஒரு வகையில் ஆனந்த்ராஜுக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது. அதாவது என்னுடன் நடித்த ஹீரோக்கள் எல்லாரும் இப்போது வில்லனாக மாறிவிட்டார்கள்.

அட அரவிந்த்சாமி கூட வில்லனா நடிக்க வந்துட்டாரு. நானாகவே ஒவ்வொரு கல்லா எடுத்து கட்டிய வீடு. செதுக்கென சிலை என ஒருத்தர் சொல்லும்போது நாம ரசிப்போம். ஆனால் நானும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாருமே இல்லை .பின்புலம் கிடையாது. என் முன்னோர்கள் திரையுலகத்தில் கிடையாது. நான் ,ஆர்கே செல்வமணி, உதயகுமார் அனைவரும் போராடி வந்தவர்கள் தான்.

ஒரு மிகப்பெரிய போராட்டம் இருக்கும் .சின்ன வயதில் நான் செத்து சுண்ணாம்பாகி இருக்கிறேன். நடிக்கும் பொழுது ஒரு பெரிய பயம் இருக்கும். தீபாவளி சமயத்தில் அனைவரும் ஊருக்கு போவார்கள். நானும் கடைசி நிமிடத்தில் வண்டி ஏறி ஊருக்கு போய்விட்டு அன்று இரவே திரும்பி இருக்கிறேன். ஏனெனில் ஒரு பய உணர்வு தான். படித்து முடித்து விட்டோம். திரைப்பட கல்லூரியில் இருக்கிறேன்.

அடுத்து நாம் என்ன பண்ணப் போகிறோம் என்ற ஒரு பயங்கர பயம் இருக்கும் .என்னை விட அதிகமாக நேசித்தவர் என்னுடைய தகப்பனார். நான் இன்று சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அப்பாதான். இந்த மாதிரி பெரிய நடிகர் சொல்லி இருந்தால் அது பெரிய விஷயமாக மாறும். ஆர்கே செல்வமணி சொல்வதை போல இன்று எங்களை குறிப்பாக என்னை முடிவு செய்வது ஒரு கதாநாயகனாக இருக்கலாம்.

முதுகு முழுக்க பல காயங்கள் இருக்கின்றது .தயவுசெய்து கலையை கலையாக பாருங்கள் .ஆர்கே செல்வமணி, உதயகுமார் இவர்கள் எல்லோருமே பெரிய இயக்குனர்கள் தான். ஆனால் இன்று அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மற்றொருவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம். இது சாபக்கேடா என்று எனக்கு தெரியவில்லை என மேடையில் அழுதுகொண்டே பேசினார் ஆனந்த்ராஜ்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.