போலீசாரின் ஆக்சனை முறியடித்த புஷ்பா!.. அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்....
Allu Arjun Arrest: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். சமீபத்தில் இவரின் நடிப்பில் புஷ்பா 2 என்கிற திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி 6 நாட்களில் இப்படம் ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது.
ஆனால், அந்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி புஷ்பா 2 வெளியான முதல் நாள் சிறப்பு காட்சியில் ஒரு துயர சம்பவம் நடந்தது. சிறப்பு காட்சியை ரசிகர்களிடன் பார்ப்பதற்காக அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு போனார்.
அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியத்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரின் மகன் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அல்லு அர்ஜூன் முன்பே அறிவித்து சென்றிருந்தால் போலீசார் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியிருப்பார்கள் என்கிற விமர்சனம் அவர் மீது எழுந்தது. இதைத்தொடார்ந்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். இதைத்தொடர்ந்து இன்று அவரை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சட்டம் தன் கடமையை செய்யும் என தெலுங்கானா முதல்வர் கருத்து சொன்னார்.
'ஆனால், எல்லா பழியையும் தூக்கி ஒருவர் மீது எப்படி போட முடியும்?' என பலரும் எதிர்ப்பு சொன்னார்கள். அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக அந்திராவில் குரல் கிளம்பியது. ஏனெனில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் தான் நிற்பதாக சொன்ன அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிதியுதவியும் அளித்திருந்தார்.
கைதுக்கு பின் அல்லு அர்ஜூனை நீதிமன்றத்தில் போலீசார் நிறுத்தினர். முதலில் அவரை 14 நாட்கள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே, இன்று இரவே அவர் விடுதலை ஆகிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜூன் மீது மட்டுமே எப்படி பழி சுமத்த முடியும்?’ என நீதிபதி கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.
அல்லு அர்ஜூன் விடுதலை ஆனது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.