ஜெயிலர் 2-வில் பெரிய வேலைய பார்த்த ரஜினியின் செல்லப்பிள்ளை.. நெல்சனுக்கு வந்த சோதனையா?..
நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாக நடித்து அசத்தி வருகின்றார். 74 வயதை தாண்டிய போதிலும் தற்போது வரை இளம் நடிகர்களுக்கு இணையாக படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன்.
ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு சுமாரான படமாகவே வேட்டையன் திரைப்படம் அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கின்றார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் சுமார் 650 கோடி வசூல் சாதனை செய்ததால் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கூலி திரைப்படத்தை முடித்த கையோடு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தையும் சன் பிச்சர் நிறுவனமே தயாரிக்க இருக்கின்றது.
ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கின்றார். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஏனென்றால் நெல்சன் திரைப்படம் என்றாலே அதற்கு அனிருத் இசையமைப்பாளர் ரஜினிகாந்தின் தற்போதைய பல படங்களுக்கு அவர்தான் இசையமைத்து வருகின்றார்.
மேலும் ரஜினிகாந்தின் செல்லப்பிள்ளையும் அனிருத். தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகின்றார். அடுத்தடுத்த படங்களில் தனது பாடல்கள் மூலமாக பல ஹிட்டுகளை கொடுத்து வருகின்றார். இதனால் தமிழ் சினிமாவில் இவரின் மார்க்கெட் தற்போது டாப் லெவலுக்கு சென்று இருக்கின்றது .
இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு அனிருத் 17 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகின்றது. இதை கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் அனிருத் சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறி வருகிறார்கள். இவ்வளவு ஏன் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் 16 கோடி சம்பளம் கேட்டுள்ள நிலையில் இந்தப் படத்திற்கு இவ்வளவு கேட்க மாட்டாரா? என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் அனிருத் இசையமைப்பதற்கு அதிலும் ரஜினி படங்களில் அவரின் இசை டாப் லெவலில் இருக்கும் நிலையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும் தப்பில்லை என்று கூறப்படுகின்றது. தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பாரா? அல்லது வேறு இசையமைப்பாளரை படக்குழுவினர் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.