கூலி படத்தை முழுசா பார்த்த அனிருத்... டாப் கியர்ல ஹைப்பை ஏத்திட்டாரே!

விக்ரம் படத்தில் லோகேஷ்கனகராஜின் இயக்கத்தைப் பார்த்து ரஜினி தனக்காக ஒரு படம் பண்ணுங்கன்னு சொன்னாராம். அப்படி உருவான படம் தான் கூலி. ஹார்பர் பேக்ரவுண்டுல தான் இந்தப் படத்தோட கதை நடக்குது. கூலி படத்தோட டீசர்ல மலையாள நடிகர் ஷோபின்ஷா, நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ரஜினின்னு எல்லாரையுமே பேக்ஷாட்டா காட்டுறாங்க. டீசர் முடியும்போது ரஜினி விசில் அடிக்கிறாரு. ஆரம்பகாலத்தில் ரஜினி 'தீ' என்ற ஒரு படத்தில் ஹார்பர் பேக்ரவுண்டுல நடிச்சிருப்பாரு. ரொம்ப சூப்பரா இருக்கும்.
கூலி படத்துக்காக ஹார்பர்ல நிறைய சண்டைக்காட்சிகள் எடுத்துருக்காங்க. அதெல்லாம் வேற லெவல்ல வந்துருக்குதாம். ரஜினிக்கு அங்குள்ள உப்புக்காற்று ஒத்துக்கொள்ளாமல் காய்ச்சல் மாதிரி வந்துவிட்டதாம். அதனால் லோகேஷ் வேற இடத்துல அதே மாதிரி செட் போட்டு மீதிக் காட்சிகளை எடுத்து முடித்தாராம்.
இதுவரை ஆடியன்ஸ் பார்க்காத ரஜினியை லோகேஷ் காட்டணும்னு நினைக்கிறாராம். அவருக்கு ரஜினி படத்தில் ரொம்ப பிடித்தது தளபதி படமாம். லோகேஷ் கனகராஜ் பல படத்துல உள்ள கனெக்ஷனைக் கொண்டு வருவாரு. இந்தப் படத்துல கூட ரஜினியோட கேரக்டர் பேரு தேவா. ரஜினி அனிருத்துக்காக ஸ்பெஷலா மியூசிக் போடுறாரு.
ரஜினிக்காக அவரு போடும் பாட்டு எல்லாமே ஹிட். கூலி படத்தின் கதைக்களம் ரொம்ப அழுத்தமானது. கூலி படத்துல 2 கேங்ஸ்டருக்கான போட்டி தான் கதை. இந்தப்படத்துலயும் ரஜினிக்கு டஃப் கொடுக்குற மாதிரி வில்லன் இருக்காராம்.
இந்தப் படத்தை முழுசா அனிருத் பார்த்துட்டாரு. அவரே இந்தப் படம் வேற மாதிரி மாஸ் என்டர்டெய்ன்மென்டா வந்துருக்கு. ரஜினி படத்துலயே இது ஸ்பெஷல். லோகேஷ், ரஜினி காம்போ சூப்பரா இருக்கு என்றும் சொல்லி இருக்கிறார். சன்பிக்சர்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
100 நாள் தான் படம் ரிலீஸ்சுக்கு இருக்கு. அந்த வகையில் கூலி கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இனி பர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், தேர்டு சிங்கிள், ஆடியோ ரிலீஸ்னு பல புரொமோஷன்கள் தயாரா இருக்கு. சுருதிஹாசனும், ரஜினியும் ஸ்க்ரீன்ல இருக்கும்போது வேற மாதிரியான வைப்பா இருக்கும். ஹாலிவுட் லெவல்ல கலரிங் உள்பட எல்லா வேலைகளும் பண்றாங்களாம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.