வெறித்தனம்… முதல் பிரபலமாக உள்ளே வரும் முரட்டு வில்லன்… தளபதி69 அப்டேட்!..
Thalapathy69: விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தின் படக்குழு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பிரபலத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.
கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நிலையில் தன்னுடைய அரசியல் கட்சியை இந்த வருடத்தின் முதலில் அறிவித்தார் நடிகர் விஜய். அதன் அறிக்கையிலேயே ஒப்புக்கொண்ட படத்தினை முடித்துக் கொண்டு சினிமாவிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் முதல் திரைப்படமான கோட் முடிந்தது. அடுத்து தளபதி 69 உருவாக இருக்கிறது. இப்படத்துடன் விஜய் தன்னுடைய சினிமாவில் இருந்து விலக இருக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.
இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பட குழு குறித்த CastReveal இன்று முதல் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்த வீடியோ பதிவில் கூட இதற்கான க்ளுவை விட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்து ரசிகர்கள் நிழற்படங்களின் ஸ்கிரீன்ஷாட்களை வைத்து சில பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டனர். அந்த வகையில் ரசிகர்கள் கணிப்பு தவறாமல் முதல் ஆளாக நடிகர் பாபி தியோல் இப்படத்தில் இணைந்திருப்பதாக கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அனிமல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களிடம் முரட்டு வில்லனாக வரவேற்பை பெற்ற பாபி தியோல் தற்போது கங்குவா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. முதல் அறிவிப்பே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் லைக்ஸை குவித்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.