Vadivelu: பல பேரை அழிச்சிட்டு நீங்க பேசலாமா?!.. வடிவேலுவை பந்தாடிய அந்தணன்..
Vadivelu: சமீபத்தில் வடிவேலு பேசிய ஒரு கருத்து பேசு பொருளாகி இருக்கிறது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசும்பொழுது ஒரு பத்து பேரு சினிமாவ அழிச்சுக்கிட்டு இருக்காங்க. அவர்களை போர்க்கால அடிப்படையில் தூக்கணும். அவர்களை தூங்க விடாமல் சட்ட ரீதியாக தொந்தரவு கொடுக்கணும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். இந்த சினிமாவை சார்ந்தவர் கலைஞர்களுக்காக அவர் பேசுகிறார் என்று சொன்னாலும் தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து நெகடிவ் ரிவ்யூவர்ஸுக்கு பணம் கொடுக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் தான் அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
இது எந்த வகையில் சாத்தியம் என நமக்கு தெரியவில்லை. நடிகர்களுக்குள் போட்டி இருக்கும். சக போட்டி நடிகரின் படம் வெளியாகும் போது அதை ஓட விடாமல் தடுத்து நிறுத்திய பிற நடிகர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளர் மற்றொரு தயாரிப்பாளர் வயிற்றில் அடிபாரா என்பது சாத்தியம் கிடையாது. வடிவேலு அதை தான் பேசி இருக்கிறார். அதாவது விமர்சனங்களை கட்டுப்படுத்துங்கள் என்று வடிவேலு சொல்ல வருகிறார். இது கை மீறி போய் ரொம்ப நாளாகி விட்டது. தியேட்டருக்கு போனை எடுத்துக்கொண்டு படம் பார்ப்பவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
இதில் பத்து பேர் தான் தமிழ் சினிமாவை அழிக்கிறார்கள் என்று வடிவேலு சொல்வது வேடிக்கையான விஷயம். ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை இலட்சக்கணக்கான பேர் பார்க்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் சொல்லிட்டாரே நாம் அந்த படத்துக்கு போக கூடாது என்றெல்லாம் இல்லை. அதை ஒரு வேடிக்கையாக பார்த்து ரசித்து விட்டு சென்று விடுவார்கள் .இதே போல் தான் மற்ற விமர்சனங்கள். இந்த படத்தை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்பார்கள். உதாரணத்திற்கு ஒரு அஜித் படம் வருகிறது என்றால் இந்த மாதிரி விமர்சகர்கள் எழுதி அஜித் ரசிகனை தடுத்துவிட முடியுமா?
இதையெல்லாம் தாண்டி இன்று சின்ன படங்களை வாழ வைப்பது இந்த விமர்சகர்கள் தான். இது வடிவேலு மாதிரியான ஆட்களுக்கு புரியுமா என்பது தெரியவில்லை. நல்ல படத்தை யாருமே அடிக்கிறது இல்லை. மொக்க படத்தை எடுத்துக்கிட்டு வந்தீங்கன்னா போறவன் வற்ரவன் எல்லாம் அடிக்கத்தான் செய்வான். இதுதான் உண்மை. இதை நீங்கள் எப்படி சரி படுத்த வேண்டும் என்று பேசணுமே தவிர அதையெல்லாம் விட்டுவிட்டு யாரெல்லாம் விமர்சனம் பண்றாங்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
சட்டமே சொல்கிறது விமர்சனம் பண்ணுவது அவர்களின் தனி உரிமை என்று. அதை ஒன்றுமே பண்ண முடியாது. எவன் ஒருவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு படத்தை பார்க்கிறானோ அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறது என சட்டம் சொல்கிறது .இதில் நீங்கள் எப்படி புதுசாக சட்டம் இயற்றுவீர்கள்? வடிவேலுவை பொறுத்தவரைக்கும் அவர் ரிட்டையர்டு ஆகி வெகு நாளாகிவிட்டது.
ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கிட்டு வடிவேலு கொஞ்ச நேரம்தான் நடிப்பாரு. இவரால அழிஞ்சி போன தயாரிப்பாளர்கள் பல பேரு. இவரு மத்தவங்கள பத்தி பேசலாமா?…
ரஜினி ,கமல், விஜய், அஜித் , சூர்யா, கார்த்தி , சிம்பு, தனுஷ் யாராச்சும் உங்களை அவர்கள் படத்தில் பயன்படுத்துகிறார்களா? அவர்களே பயன்படுத்தாத போது அடுத்த தலைமுறை நடிகர்கள் எப்படி பயன்படுத்துவார்கள். சுந்தர் சி போன்ற ஆள்கள்தான் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள். அப்போ குணச்சித்திர கேரக்டர்தான் உங்களை தேடி வரும். மாமன்னன் படம் மட்டும்தான் ஓடுச்சு. அடுத்து வந்த வடிவேலு படம் ஓடுச்சா? இப்படி இருக்கும் போது விமர்சிப்பவர்களை எப்படி நீங்கள் இந்த மாதிரி பேச போச்சு என அந்தணன் சரமாரியாக வடிவேலுவை தாக்கியிருக்கிறார்.
