
Cinema News
Vijay: அவருடைய பலமே பலவீனமா ஆயிடுச்சு! எஸ்.ஏ.சி சொல்லியும் மறுத்த விஜய்
Vijay:
கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். கரூர் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் ஒரே அலறல் சத்தமாக தான் கேட்டது. இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்திருக்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர். இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி என்று ஒரு தரப்பும் இது விபத்துதான் என்று ஒரு சிலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் இது விஜய் தேர்தல் பரப்புரையின் போது நடந்த சம்பவம் என்பதால் ஒட்டுமொத்த கேள்விகளும் விஜய் மீதுதான் திரும்பி இருக்கின்றன. இதுவரை இந்த சம்பவத்திற்காக விஜய் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டையே வைத்து வருகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகின்றது. இதைப்பற்றி வலைப்பேச்சு அந்தணன் அவருடைய சேனலில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஒருவருக்கு அவருடைய பலமே பலவீனமாக ஆகிவிட்டது. விஜயின் பலம் என்பது அவருடைய ரசிகர்கள் தான் .இன்று அந்த ரசிகர்களால் தான் இவ்வளவு தூரம் நடந்திருக்கிறது.
விஜய்க்கெதிரான கேள்விகள்:
விஜய் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் அவருடைய ரசிகர்களாகட்டும் தொண்டர்களாகட்டும் கூரையின் மீது ஏறுவது கொடி மரத்தின் மீது ஏறுவது கரண்ட் கம்பம் மீது ஏறுவது என பார்க்கவே உயிர் போகும் அளவிற்கு அவர்களின் செயல்கள் இருந்தன. இது தொடர்பாக நீதிமன்றம் பல கேள்விகளை விஜய்யிடம் முன்வைத்து வருகிறது. அந்த கேள்விகள் அனைத்தும் விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. விஜய்க்குமே அதிர்ச்சியாக தான் இருக்கும். அந்த அளவுக்கு நீதிமன்றத்தின் கேள்விகள் இருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அவ்வளவு கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே இரண்டு மூன்று பேர் மயங்கி விழுகின்றனர். அதை பார்த்தும் விஜய் பத்து ரூபாய் பாடலை பாடுகிறார். வெற்றி நிச்சயம் எனக் கூறுகிறார். இப்படி இவர் செய்யலாமா என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பொதுவாகவே அத்தனை ஒளி விளக்குகளும் விஜய் முகத்தின் மீது திரும்பும்போது வெளிச்சத்தில் இருந்து இருட்டை பார்க்கும் போது அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அப்படி கூட இருந்திருக்கலாம். கீழே என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம். அதற்காக இதை நான் நியாயப்படுத்த வரவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களில் இத்தனை பேர் மயக்கம் போட்டு விழுந்தும் விஜய் தன்னுடைய பேச்சை தொடர்ந்து கொண்டுதானே இருந்தார் என அவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் .
இது இரங்கல் வீடியோவா?
இன்னொரு விஷயம் என்னவெனில் அரசியலைப் பொறுத்த வரைக்கும் உடனுக்குடன் கருத்தை பதிவு செய்வது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தானே முடிவு எடுப்பது இதுதான் சரியாக இருக்கும், அவர் சொல்லட்டும் இவர் சொல்லட்டும் என காத்திருக்காமல் உங்களுக்கு என்ன படுகிறதோ அதை வெளிப்படுத்த வேண்டும், ஒன்றுமில்லை கரூர் சம்பவம் குறித்து 90 மணி நேரம் கழித்து விஜய்யிடம் இருந்து இரங்கல் அறிவிப்பு வருகிறது .இது ஒரு சரியான கேள்வியாக இருக்க முடியும் .இதில் ஏன் நீங்கள் காத்திருக்க வேண்டும். அன்று இரவு வந்து இறங்கினீர்கள். வந்து இறங்கியதுமே ஒரு வீடியோவை போட்டு இருக்கலாம் .ஆனால் நீங்கள் வெளியிட்ட வீடியோவை பார்க்கும் பொழுது அழகாக தலையை வாரிக் கொண்டு டிரிம் செய்து கொண்டு வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள்.
அதை பார்க்கும் பொழுது எத்தனை பேருக்கு வலித்திருக்கும். அதிலும் அந்த 41 பேர்களின் பெயர்களை அறிவித்து இருந்திருந்தால் கூட அந்த உயிருக்கு உண்டான மதிப்பாக அது இருந்திருக்கும். அதைக்கூட நீங்கள் சொல்லவில்லை. அந்த வீடியோ வெறும் கண்ணீர் வீடியோவாக தானே இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவருக்கு சொல்லிக் கொடுக்க ஆட்கள் இல்லை என்று தான் தோன்றுகிறது. இந்த நேரத்தில் உங்களுடைய ஈகோ எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு உங்க அப்பா கூட போய் சேர்ந்து கொள்ளுங்கள். நான் கேள்விப்பட்ட வரைக்கும் அவருடைய அப்பா விஜய்க்கு போன் செய்து தம்பி நான் இருக்கிறேன். கவலைப்படாதே நான் வருகிறேன் என்று அவர் சொன்னதாகவும் இல்லப்பா நீங்கள் இந்த வந்தீங்கன்னா இங்கே இருக்கிற நிர்வாகிகள் அனைவரும் பயப்படுகிறார்கள் என்று விஜய் சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
ஒரே வழி இதுதான்:
எஸ் ஏ சியை பொருத்தவரைக்கும் அவர் அந்த நிர்வாகிகளை கையாளுகிற விதம் என்பது வேறு மாதிரியாக இருக்கும். அப்போதான் வேலை சரியாக நடக்கும் என நினைத்து தான் எஸ்ஏசி மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அதை விஜய் சுட்டிக்காட்டி அப்பா நீங்க இங்க வந்தா அவங்க எல்லாருமே பயப்படுவார்கள். அதையும் தாண்டி நீங்கள் என்கூட வந்து உட்கார்ந்து விட்டீர்கள் என்றால் இது ஒரு குடும்ப அரசியலாக மாறிடும். நாம எதிர்த்து பேசுவது குடும்ப அரசியலுக்கு எதிராகத்தான். இதில் நீங்களும் என்னுடன் வந்து விட்டீர்கள் என்றால் மற்றவர்கள் பேச்சுக்கு நாம் ஆளாகி விடுவோம் என்று விஜய் சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
ஒரு வேளை எஸ்.ஏ.சி மாதிரி ஒரு அனுபவசாலி விஜய் உடன் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனையை சந்தித்திருக்க மாட்டார் என்பது தான் என்னுடைய அழுத்தமான நம்பிக்கை .இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகவில்லை. உங்க அப்பாவை விட நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிற மனுஷன் இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது அவரை கொண்டு வந்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உடனுக்குடன் உங்களை அவர் அப்டேட் செய்து கொண்டே இருப்பார். அப்படி இருக்கும் பொழுது இவ்வளவு பெரிய குறைகளும் குற்றங்களும் உங்கள் தலையின் மீது வந்து உட்காராது .இனிமேலாவது அவரைப் போன்ற ஒரு அனுபவசாலியை உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்தனன் அவருடைய சேனலில் பேசி இருக்கிறார்.