பாலிவுட் சினிமா கேவலமானது.. மும்பையை காலி பண்ண இயக்குனர்.. இங்கயும் சிலர் இருக்காங்க!..

by Ramya |   ( Updated:2024-12-31 14:18:15  )
பாலிவுட் சினிமா கேவலமானது.. மும்பையை காலி பண்ண இயக்குனர்.. இங்கயும் சிலர் இருக்காங்க!..
X

anurag kashyap

அனுராக் காஷ்யப்: தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் பாலிவுட்டுக்கு படையெடுத்து சென்று அங்கேயே செட்டிலாகி கொண்டிருக்கும் நிலையில் பாலிவுட்டில் இருந்து மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டிக்கொண்டு ஒரு இயக்குனர் தென்னிந்தியா பக்கம் வர இருக்கின்றாராம். அவர் வேறு யாரும் இல்லை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தான்.

பாலிவுட்டில் பிரபல இயக்குனராக கலக்கிக் கொண்டிருந்த அனுராக் காஷ்யப் சமீப நாட்களாக படங்களை இயக்காமல் இருந்து வருகின்றார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவர் நடிகை நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


அந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த வருடம் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மகாராஜா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ரைபிள் கிளப் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.

இப்படி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அனுராக் காஷ்யப் சமீபத்திய பேட்டியில் பாலிவுட் சினிமா குறித்து பேசி இருந்தார். பணம் அதிகமாக செலவாகும் என்பதற்காக புதிய முயற்சிகளை எடுப்பது கடினமாக இருக்கின்றது. அதிலும் நான் இயக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர்கள் லாபம் கிடைக்குமா? என்று யோசிக்கிறார்கள்.

மேலும் ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பே அதனை எப்படி வியாபாரம் செய்வது என்கின்ற நோக்கத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. நான் அடுத்த வருடம் மும்பையில் இருந்து வெளியேறி தென்னிந்தியாவுக்கு செல்ல இருக்கின்றேன். என்னுடைய சினிமா துறையை எண்ணி நான் ஏமாற்றமடைகின்றேன், அருவருப்பாக உணர்கின்றேன்.

தென்னிந்திய சினிமாவில் ஹிட்டுக்கொடுக்கும் திரைப்படங்களை ரீமேக் செய்ய மட்டுமே இந்தியில் முன் வருகிறார்கள். புதிய முயற்சிகளுக்கு இங்கு மதிப்பில்லை, மக்களுக்கு ஏற்கனவே பிடித்த விஷயங்களை வைத்து திரைப்படத்தை எடுக்கிறார்கள். அதை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.


இதை பார்த்த பலரும் தமிழ் சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் பாலிவுட் சினிமாவுக்கு படையெடுத்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மும்பையில் புதிய ஸ்டூடியோ ஒன்றை திறக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்த அட்லி ஜவான் திரைப்படத்தை இயக்கிய பிறகு மும்பையிலேயே வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். மேலும் ஜெயம் ரவியும் தற்போது மும்பையில் செட்டிலாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இவர்களை எல்லாம் ரசிகர்கள் தற்போது திட்டி தீர்த்து வருகிறார்கள். பாலிவுட்டில் இருக்கும் நடிகரே பாலிவுட் சினிமா குறித்து இப்படி பேசி வரும் நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் பாலிவுட்டுக்கு படையெடுக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

Next Story